பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது - ரணில்
பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்குழு இது தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளராக கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவை நியமிக்குமாறு தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் கிராம்பே ஆனந்த தேரர், வலியுறுத்தி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே எதிர் கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளர் குறித்து பேசுவதை விடவும் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்துவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment