Header Ads



அஸ்வர் இடையூறுகளை செய்ய, வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்த சபாநாயகர்

விவாதங்களின்போது தேவையற்ற விதத்தில் இடையூறுகள் செய்வோர் சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்களென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடும் தொனியில் எச்சரித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் ஐ.தே.க.எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றத்தொடங்கியபோது வழமைபோலவே அரச தரப்பு தேசியப்பட்டியல் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இடையூறுகளை செய்யத்தொடங்கினார். 

இதனையடுத்து அவருடன் ஐ.தே.க. எம்.பி.க்கள் தர்க்கப்பட்டனர். 

இதன்போதே விவாதங்களின்போது தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்வோர், இடையூறுகளை ஏற்படுத்துவோர் சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடும் தொனியில் எச்சரித்தார். அதன் பின்னர் சபாநாயகர் ஆசனத்தில் இருக்கும் வரை விவாதம் இடையூறுகள், குறுக்கீடுகள் இன்றி இடம்பெற்றது. 

No comments

Powered by Blogger.