Header Ads



கருக்கலைப்பு, கருத்திட்ட, கஞ்சி கொடுக்கும் அமைச்சர்களும் உள்ளனர் - அரியநேத்திரன்

கருத்திட்ட அமைச்சரை கருக்கலைப்பு அமைச்சரெனக் குறிப்பிட்ட அரியநேத்திரன் எம்.பி. பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான அரியநேத்திரன் உரையாற்றினார்.  

இதன்போது அமைச்சுகளின் வெளியீடுகளான நூல்கள், சி.டி. க்களில் இடம்பெற்ற தமிழ் மொழிக் கொலைகளைச் சுட்டிக்காட்டிய அவர் தமிழர்களை கொன்றார்கள். இப்போது தமிழ் மொழியையும் கொல்கிறார்கள் எனக்கூறிவிட்டு இங்கு கருக்கலைப்பு அமைச்சர் எனக் கூறிவிட்டு மன்னிக்கவும் கருத்திட்ட அமைச்சரும் உள்ளார். கஞ்சி கொடுக்கும் அமைச்சரும் உள்ளார். காட்டிக்கொடுக்கும் அமைச்சரும் உள்ளார் என்று கூறித் தனது உரையை தொடர்ந்தார். 

1 comment:

  1. வர்களுக்கு வேற வேலையே இல்ல வைக்கோலில் படுக்கும் ..................
    மாதிரி.சனத்துக்கு எந்த நல்லதும் செய்யமாட்டார்கள் செய்கிறவனை விடவும் மாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.