Header Ads



6 வருடங்களாக தீராத தலைவலி, மனிதனின் மூளைக்குள் குடிபுகுந்த நாடா புழு - டாக்டர்கள் அதிர்ச்சி


லண்டனில் கிழக்கு ஏஞ்சலியா நகரில் சீன வம்சாவளியை சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தீராத தலைவலி, வலிப்பு நோய், ஞாபக மறதி மற்றும் காதுகள் வழியாக அருவருத்தக்க வாசனை வெளிவருதல் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார். அவர் பல டாக்டர்களிடம் சென்று காண்பித்தும் அவரது நோய் தீரவில்லை. பின்னர், சமீபத்தில் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு தலை முதல் கால் வரை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. எச்ஐவி உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 அவரது மூளைக்குள் கடந்த 6 வருடங்களாக 10 செ.மீ. நீளமுள்ள ஒட்டுண்ணி ரக நாடா புழு விளையாடி வந்தது எம்ஆர்ஐ பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர், அவருக்கு நேற்று முன்தினம் மூளையில் அறுவை சிகிச்சை செய்து, 10 செ.மீ. நீள நாடா புழு அகற்றப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது. ஒருவர் பச்சையாக மாமிசங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் சுட்டு தின்னும்போது, இத்தகைய ஒட்டுண்ணி ரக நாடா புழு மனிதனின் உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மனிதனின் மூளைக்குள் கடந்த 6 வருடங்களாக நாடா புழு விளையாடியதை தற்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம் என்று டாக்டர் எப்ரோஸ்சைனி கிக்ரானியா க்ளோட்சாஸ் கூறினார்.

No comments

Powered by Blogger.