முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள், கட்சியைக் கைப்பற்றுவார்களா..?
(நஜீப் பின் கபூர்)
நமக்குக் கிடைத்த பிந்திய தகவல் படி மு.கா. முக்கோணமாக மீண்டும் பிளக்கின்றது. கோடிக் கணக்கான பணத்துக்கு சிலர், மைத்திரி நீரோட்டத்தில் நீராடப் போகின்றவர்கள், மற்றும் தiமைக்கு விசுவாசமாக இருந்து அரசியல் செய்கின்ற ஒரு கூட்டம் என்று நாம் இந்தக் குழுக்களை அடையளப் படுத்துகின்றோம்.
இவர்கள் தாம் போய்ச்சேரும் தரப்புக்களுடன் ஏற்கெனவே பேச்சு வார்த்தைகளையும் நடாத்தி முடித்திருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது.
எனவே நாளை 23-11-2014 நடக்கின்ற செயற் குழுக் கூட்டத்தில் மு.கா. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படி ஒரணியில் வைத்திருக்க போகின்றது. போகின்ற இடங்களில் சமூகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து எப்படிக் காரியம் பார்க்கப் முடியும் என்று கேட்கத் தோன்றுகின்றது.
மு.கா. முடமாகி நிற்கப் போகின்றது. எனவே இதன் பின்னரும் மு.கா. முஸ்லிம்களுக்கு உரிமைகள் பெற்றுத்தரும் சமூகத்தைக் காக்கும் என்று எவராவது கனவு காண முடியுமா? எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் உண்மைத் தன்மையை இன்னும் ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள முடியும்.
ஒட்டு மொத்தமாக மு.கா.இந்த முறை பணம், பதவி, சுயநலம் என்று பிளக்கின்றது. எனவே இதனை எப்படித் தடுத்து நிறுத்துவது என்று சமூகம் சிந்திப்பதை விட சந்தர்ப்ப வாதிகள் பிடியிலிருந்து முகாவை கைப்பற்றி அதனை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்ல ஒரு அணி களமிறங்க வேண்டி இருக்கின்றது என்பது எமது கருத்து.

Post a Comment