வழிதவறிய 400 பல்கலைக்கழக மாணவர்களை காப்பாற்றிய பொலிஸார்
Tm)
பலாங்கொடை, இஹலகலகம நாகல மலைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் வழிதவறிய, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்கள் 400 பேரை காப்பாற்றியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை, இஹலகலகம நாகல மலைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் வழிதவறிய, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவர்கள் 400 பேரை காப்பாற்றியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை மற்றும் சமனலவெ ஆகிய பொலிஸ் நிலையங்களைச்சேர்ந்தவர்களே மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.
கடும் குளிர், பனிமூட்டம் இருக்கின்ற இந்த மலைக்கு கிராமவாசிகள் கூட செல்வதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பஸ்களில் வந்ததாகவும் நீரோடைகள் மற்றும் வழுக்கும் தன்மையை கொண்டிருக்கின்ற கற்பாறைகள், பாம்புகள் இருப்பதனால் இந்த மலைக்கு ஏறுவது பெரும் சவாலாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment