Header Ads



கல்முனை சாஹிரா பாடசாலை 3 மாடிக்கட்டிடத்துக்கான கல்நடுகையும், ஸ்தபாகர் நினைவும்


-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடத்துக்கான கல்நடுகையும் ஸ்தபாகர் நினைவு நிகழ்வும் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் 2014-11-16 ல் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

 மூன்று மாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நடப்பட்டதுடன் இப்பாடசாலையின் ஸ்தபாகர் எம்.எஸ். காரியப்பர் அவர்களை நினைவுகூறும் சொற்பொழிவும் இடம்பெற்றது விசேட சொற்பொழிவை ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.இப்ராஹீம் நிகழ்த்தினார். அதேவேளை பாடசாலையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்து தந்த மாணவர்களுக்கு பாராட்டுதல்களும் ஞாபக பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,சாய்ந்தமருது பிரதேச கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரஹீம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ,எல்.எம்.சலீம்.உட்பட உயர் அதிகாரிகளும் பெரும் திரளான பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.    



No comments

Powered by Blogger.