Header Ads



பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் - 18 திருத்தத்திற்கு கை தூக்கினோம் - ஹசன் அலி..!


ஆதாரம் கைவசம் இருக்கின்றது. 

(நஜீப் பின் கபூர்)

கதை சொல்வது நமது தலைகள்
கதை கேட்டுக் கொண்டிருப்பது 
கேடு கெட்ட நமது சமூகம்

முஸ்லிம்களே இந்தக் கதையையும் 
ஒரு முறை படித்துப் பாருங்கள்

அப்போது நமது சமூகத்தின்
எதிர் காலம் எப்படி அமையப்போகின்றது 
என்பது உங்களுக்குப் புரியும்.!

தற்போது ஜனாதிபதிக்கு எல்லை மீறிய அதிகாரங்களை உபயோகிக்க 18 திருத்த மூலம் காரணமாக இருந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமே. இந்த 18 திருத்த மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பலர் தற்போது சமூகத்தின் முன் வந்து அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த 18 விடயத்தில் நேரத்திற்கும் இடத்திற்கும்  ஒரு கதையை தேவைக்கு ஏற்றவாறு பேசி வருவதும அனைவரும் அறிந்த விடயம். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள அல்லது அவரது நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ள 18திருத்த மூலத்திற்கு நாம் ஆதரவாக வாக்களித்திருக்கின்றோம் என்று நினைவுபடுத்துவார்கள். 

18க்கு கைதூக்கியது ஒரு  சாதனைபோல்   கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது முறையாகவும் இதன் மூலம் ஜனாதிபதிக்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுத்தது நாங்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் மு.கா.தலைவர் பேசி இருந்தார். எனவே இவர்கள் பூரண விருப்பத்துடனே 18 திருத்தத்தை ஆதரித்தார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் இந்த 18வது திருத்த மூலத்திற்கு வாக்களித்தது என்று தற்போது ஒரு புதுக் கதையை சந்தைப்படுத்தி இருக்கின்றார். மு.கா. செயலாளர் ஹசன் அலி. அவர் தனது வாக்கு மூலத்தில் என்ன  சொல்லி  இருக்கின்றார் என்று இப்போது பார்ப்போம்.

அந்த நிகழ்வு நடந்து முறை  மிகவும் அசிங்கமானது அநாகரிகமானது. எங்களுடைய உயிர்களுக்கு ஆபத்து இருக்கின்றது எனவே நீங்கள் 18க்கு ஆதரவு தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. அந்த நிலையில்தான் இது நடந்தது. 

இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றோம் என்பது ஹசனாரின் புதுக் கதை! 

எமது இந்தச் செய்தி வந்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டால் அதற்கு வேறு அறிக்கைகளும் வார இடமிருக்கின்றது. நாம் இங்கு முன்வைக்கின்ற ஹசன் அலி பற்றிய குறிப்பு ஆதாரபூர்வமானது. என்பதனையும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றோம்.

தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாம் இந்த 18ம் திருத்தத்திற்கு எமது  கரங்களைப் பாராளுமன்றத்தில் உயர்த்தினோம் என்று கூறுகின்றார் இப்போது. அப்படியானால் உங்களை அச்சுறுத்தியவர்கள் யார் என்று கூற முடியுமா என்று கோட்டல் அவர்களின் பெயர்களை சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே அச்சுறுத்தல்களுக்கு பயந்து இவர்கள் இதன் பின்னரும் காரியம் பார்க்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. எனவே தாம் கோரி நிற்கின்ற கரையோர நிருவாக அலகின் காதையும் இதுதான் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள முடியும்.

தனக்கு ஒரு கனதியான அமைச்சு வேண்டும் ஐயா...!
இருவரைச் சமாளிக்க துணை 2ம் கூடவே தேவை ஐயா...!
சகோ.வுக்கு தூது பதவியும் தந்துட்டால் போதும் ஐயா...! 
சமூகப் பிரச்னை தனி அலகு என்று அவ்வப்போது ஐயா...!
நாம் ஏதாவது வாய்தவறி விட்டால் அததைப்போய் ஐயா...!
பெரிது படுத்திக் கொள்ள வேண்டாம் ஐயா...!
அரசியல:;-நாங்கள் சொல்ல குடிகள் கேட்பதுதான் ஐயா...!

5 comments:

  1. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டி எழுப்பப்பட வேண்டுமானால் நஜீப் பின் கபூர் போன்றவர்கள் கட்டாயம் தேவை. நஜீப் பின் கபூர் அவர்களே, உங்கள் பணியை தளராமல் முன்னெடுத்து செல்லுங்கள். நிட்சயம் இறைவனிடத்தில் இதற்கான கூலி உண்டு.

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் பொய்யர்களின் சரணாலயம். இனி எப்போதும் நம்பாதீர்கள். உங்களுக்கு அவர்கள் ஒருபோதும் நல்லது செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  3. தமிழனிடமே கொள்ளையடித்து அதன் மூலமே உல்லாச வாழ்க்கை வாழ்ந்து..தமிழனை அழிப்பதற்கு பேயுடனும் கூட்டுவைக்கத் தயங்காமல்
    பண மயக்கத்தில் உழன்றீர்கள் தானே அனுபவிப்பீர்களடா...
    த தே கூட்டமைப்பு என்கின்ற நோய் எப்போது தமிழனை விட்டு அகலுதோ
    அன்றைக்கு ஆரம்பிக்கும் உங்களுக்கு ஆப்பு..தைரியம் இருந்தா இந்தக் கருத்தையும் வெளிவிடுங்கடா பார்ப்போம்.

    ReplyDelete
  4. Mr. Karan Kanna, நீங்கள் நல்லதொரு மன நோய் மருத்துவரை நாடினால் நல்லது. நிட்சியமாக நீர் தற்போது ஸ்ரீ லங்காவில் வாழவில்லை என்பது மட்டும் உண்மை. தற்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எப்படி எண்பதுகளுக்கு முதல் வாழ்தார்களோ அப்படி இப்போது வாழத்துவங்கி உள்ளார்கள். தயவு செய்து உனது நர புலி சிந்தனையை களைந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.