Header Ads



இலங்கையில் ஆகக்கூடுதலான நிதியை செலவிடும் பாரிய திட்டம் 14ம், 15ம் திகதிகளில் ஆரம்பம்

அதிவேகப்பாதையின் நிர்மாண வேலைகள் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் குருநாகல், கலகெதர, கவேவெல, ரம்புக்கனை ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மஹர - என்டேரமுல்லையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அதிவேகப்பாதை, இலங்கையில் ஆகக்கூடுதலான நிதியை செலவிடும் பாரிய திட்டமாகும். தற்போதைய மதிப்பீடுகளின் படி 35 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

ஆரம்பத்தில் கண்டி வரை நிர்மாணிக்கப்படும் இந்த அதிவேகப்பாதை பின்னர் வட பகுதி வரை கொண்டு செல்லவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.