Header Ads



இதுவே போராட்டங்களை முன்னெடுக்க சிறந்த சந்தர்ப்பம் - JVP

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த தயாராகிவரும் இந்த வேளையில், தொழில் தொடர்பான போராட்டங்களுக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரியில் 10-10-2014 நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு புறத்தில் அரசாங்கத்தின் பலம் குறைந்து வருகிறது. மறுபுறம் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு தயாராகி வருகிறது.

எனவே இதுவே போராட்டங்களை முன்னெடுக்க சிறந்த சந்தர்ப்பம். மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வர 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும்.

இதனால், மக்களின் மனங்களை வெல்லும் தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. சுமார் 14 லட்சம் அரசாங்க ஊழியர்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர்கள். இதனால், அவர்களை புறந்தள்ள முடியாது.

இந்த நிலையிலேயே எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர், ஆசிரியர் - அதிபர்களின் சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே தொழிற் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், மாணவர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் தமது கோரிக்கைகளை கூடிய அளவில் அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் எனவும் லால்காந்த குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.