Header Ads



பாசிச புலிகளின் தாக்குதலில் ஷஹீதானவர்களுக்கு உதவி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

1990 ஆம் ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில்; 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 05-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இதன் போது பள்ளிவாயல் தாக்குதலில் ஸஹீதான 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் பிரதிநிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி அந் நிறுவனத்தின் செயலாளர் எம்.ஐ.நாஸர் அதன் பொருளாளர் முஹம்மட் றுஸ்வின் மற்றும் காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.