மலாலாவுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு குறித்த விமர்சனங்கள்
(GTN)
நோபல் பரிசை பெறுவது என்பது வழமையில் ஒரு தேசமே கொண்டாடும் விடயம். எனினும் பாக்கிஸ்தானில் இதற்க்கு மாறாக உணர்வுகளே வெள்ளிக்கிழமை தென்பட்டன. சமாதானத்திற்காக நோபல் பரிசை இளம்வயதில் பெற்றவர் என்ற பெருமை மலாலாவிற்க்கு கிடைத்துள்ள போதிலும் அவரது தேசம் அதனை கொண்டாடவில்லை மாறாக இந்த பரிசு வழங்கப்பட்டதற்கான அரசியல் பிண்ணணி குறித்த சந்தேகங்களையும், எதிர்ப்புணர்வையும் காணமுடிந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பாராட்டுக்களுடன் கண்டனங்களும், விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. விசேட செய்திகளை ஒளிபரப்புவதை வாடிக்கையாக கொண்ட பாக்கிஸ்தானின் இலத்திரனியல் ஊடகங்களும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.மலாலாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது பல பாக்கிஸ்தானியர்களுக்கு பல மணிநேரத்திற்க்கு பின்னரே தெரியவந்தது.
பாக்கிஸ்தானின் ஒப்சேவர் நாளிதழின் ஆசிரியர், தாரிக் கட்டாக் மலாலாவிற்க்கு இந்த விருது வழங்கப்பட்டதை கண்டித்துள்ளார்-
இது அரசியல் தீர்மானம், சதித்திட்டம் என பிபிசிக்கு தெரிவித்த அவர் மலாலா வழமையான யுவதி, பிரயோசனமற்றவர், அவரிடம் விசேடமாக எதுவும் கிடையாது, மேற்குலகம் விற்பதை அவர் வாங்குகிறார் என்றும் கட்டாக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் பாக்கிஸ்தானில் உள்ளவர்கள் உட்பட பலரால் சகித்துக்கொள்ள முடியாததாக விளங்குகின்றது.
எனினும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலிபானால் தலையில் மலாலா சுடப்பட்ட தருணத்திலிருந்து இவ்வாறான கருத்துக்களை கேட்கமுடிகின்றது.
மலாலாவிற்க்கு நோபல் பரிசு கிடைத்ததை பாக்கிஸ்தானிய அரசியல் தலைவர்கள் பரவலாக வரவேற்றுள்ளனர். பிரதமர் நவாஸ் ஷெரீவ், ஜனாதிபதி அசிவ் சர்தாரி போன்றவர்கள் மலாலாவை பாராட்டியுள்ளனர்.
- அவர் பாக்கிஸ்தானை பெருமையடைச்செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர் – சில பாடசாலைகள் பாராட்டு நிகழ்வுகளை உடனடியாக ஏற்பாடு செய்துள்ளன.
மௌனம் காக்கும் சொந்த கிராமம்
பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள மலாலாவின் சொந்த நகரமான மின்கொரா இந்த செய்தி கிடைத்த பின்னரும் மிகவும் அமைதியாக காணப்பட்டது.
மலாலாவிற்கு நோபல் பரிசு கிடைத்த செய்திவந்த வேளை குறிப்பிட்ட நகரம் தொழுகையில் ஈடுபட்டுகொண்டிருந்தது- பண்டிகை காரணமாக பாடசாலைகளும் அன்று இயங்கவில்லை. இயங்கிக்கொண்டிருந்த பாடசாலைகளிலும் நோபல் பரிசு கொண்டாடப்படவில்லை.
இந்த நகரிலேயே மலாலா தலிபானின் அச்சுறுத்தல்களை எதிர்த்தார்,பெண்களின் கல்விக்காக துணிச்சலாக குரல்கொடுத்தார்.
பாடசாலை மாணவியாக இருந்துகொண்டே பிபிசி உருதுசேவைக்காக புனைபெயரில் நாட்குறிப்பொன்றை எழுதினார்,
2009 இல் தலிபானை இராணுவம் அப்பகுதியிலிருந்து வெளியேற்றிய பின்னர் வெளிப்படையாகவே பெண்கள் கல்விக்காக தன்னுடைய பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.
2012 செப்டம்பரில் தலையில் சுடப்பட்டதை தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.
பெண்கள் கல்விக்காக துணிச்சலுடன் குரல்கொடுத்ததிற்காக பலர் பாக்கிஸ்தானில் மலாலாவை பாராட்டியுள்ள அதேவேளை அமெரிக்காவின் கைப்பபொம்மையாக அவரை கருதுவதையும் அவதானிக்க முடிகிறது.
அமெரிக்கர்கள் பாக்கிஸ்தானிய இளந்தலைமுறைக்கான முன்மாதிரியாக அவரை முன்னிறுத்த முனைகின்றனர். இதன் மூலம் இஸ்ஸாமிய இளைஞர் யுவதிகளை தவறாக வழிநடத்த முனைகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் காணமுடிகிறது.
மலாலாவை புகழ்பெறச் செய்வதற்காக அவரது தந்தையும், அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியே இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் என அதிர்ச்சியளிக்க கூடிய கருத்தை வெளியிட்டார் மின்கோரவை சேர்ந்த ஊடகவியாலளர் ஒருவர்.
நோபல் பரிசு பெறுவதற்க்கு அவர் என்ன செய்துள்ளார், அவர் துணிச்சலானவரான இருக்கலாம், ஆனால் அவர் ஒரு குழந்தை,அவாகள் பத்துவருடம் காத்திருந்திருக்க வேண்டும், பலவீனமான நிலையிலுள்ள சமுகத்திற்கான அவரது பங்களிப்பை செய்வதற்க்கு அனுமதித்த பின்னர் விருது குறித்து தீர்மானித்திருக்க வேண்டும் என இஸ்லாமபாத்தில் குடும்பத்தலைவி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறான கருத்துக்களை பாக்கிஸ்தானின் தாராளவாதிகள் கடுமையாக எதிர்ப்பதையும் சமூக வலைத்தளங்களில் காணமுடிகின்றது.
மலாலாவின் தந்தை குறித்தும்சுட்டிக்காட்டப்படுகின்றது,அவர் ஏஎன்பி என்ற அமைப்பை சேர்ந்தவர், அந்த கட்சி செஞ்சட்டை என்ற அமைப்புடன் தன்னை இனம்காண்கிறது, இவர்கள் மதச்சார்பற்ற பஸ்தூன்கள், மகாத்மா காந்தியின் அகிலஇந்திய காங்கிரசுடன் இணைந்து இந்திய பாக்கிஸ்தான பிரிவினையை எதிர்த்தவர்கள்
சுதந்திரத்திற்க்கு பின்னர் இவர்கள் மீது துரோகிகள் முத்திரை குத்தப்பட்டது,மதத்தiயும்,மதகுழுக்களையும் பயன்படுத்திய பாக்கிஸ்தான் இராணுவத்தால் துன்புறுத்தலிற்காளானது.
முலாலாவை அவரது தந்தையின் இந்த பின்னணியை வைத்து விமர்சிப்பதற்க்கு பாக்கிஸ்தான் ஊடகங்கள் தயங்கவில்லை.
முலாலாவின் தந்தை ஒரு நல்ல வியாபாரி,மலாலாவும், அதனை பின்பற்றுகிறார், மேற்குலகின் தாளத்திற்க்கு ஆடுகிறார் என்றார் ஒரு ஊடகவியலாளர்

Post a Comment