Header Ads



ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது - அதிபர், ஆசிரியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழிநுட்ப கூடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் இன்றைய நிகழ்விலேயே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும், இரண்டு லட்சத்து 20ஆயிரம் ஆசிரியர்களின் நியமனம், சம்பள பிரச்சினை ஆகியவற்றை உடனடியாக தீர்க்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வியமைச்சு மற்றும் மாகாண சபைக்கு கீழ் சேவை புரியும் அனைத்து ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள கொடுப்பனவு ஆகியன டிசம்பர் 31ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெர்வித்துள்ளார். 

1 comment:

  1. ஏற்றிவிடும் ஏணிகளான ஆசிரியர்களுக்கு பொதுவாக உலகநாடுகள் எங்கிலும் மரியாதை மட்டுமல்ல உயர்ந்த வேதனமும் வழங்கப்படுகின்றது. உயர்ந்த வேதனம் வழங்கப்படுவதால் தமது முழு ஆற்றலையும் மாணவர்களின் ஆற்றலை வழிப்படுத்தி உயர்த்தும் நடவடிக்கைகளிலே காண்பிக்க முடிகின்றது அவர்களால்.

    ஆனால் நமது நாட்டில்..? ஆசிரியர்களுக்கு அடிமட்ட வேதனமே தரப்படுகின்றது. இதனால் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பது எப்படி என்று போராடுவதற்கே இங்குள்ள ஆசிரியர்களின் ஆற்றல் வீணாகின்றது. இதைப் புரிந்துகொண்டு ஆசிரியத் தொழிலுக்குரிய வேதனத்தை அதிக மட்டத்திற்கு உயர்த்த வேண்டும்.

    அப்போதுதான் நமது நாட்டிலுள்ள ஆசிரியர்களும் கற்பிக்கும் நேரத்திலே காதிலே போனை வைத்துக்கொண்டு, 'சீமெந்து இறக்கியாச்சா.. மேசன் ரெடியா..?' என்றெல்லாம் பேசிக்கொண்டிராமல் ஒழுங்காகத் தங்களுடைய வேலையைப் பார்ப்பார்கள்.

    அதைவிட்டு விட்டு ஏசீ றூமில் இருந்து கொண்டு என்ன திட்டங்களைத் தீட்டினாலும் அது பிரயோசனப்படப்போவதில்லை.!

    ReplyDelete

Powered by Blogger.