Header Ads



இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் கோத்தாபய ராஜபக்சவே..!

இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் கோத்தாபய ராஜபக்சவே - பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ்:

இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச என நீதிமன்றத்தில் புகழாராம் சூட்டியுள்ள பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ் இதன் மூலம் அரசாங்கத்துடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் விவசாய துறை விஞ்ஞானிகள் சிலர் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல்வழக்கு தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளின் எதிர்ப்பையும் மீறி தனது மேதாவித்தனத்தை பல இடங்களில் வெளிப்படுத்திய மொகான் பீரிஸ்  அனைத்தையும் அறிந்த ஒருவர் கோத்தாவே என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் வத்திக்கானிற்க்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான தூதுக்குழுவில் இலங்கையின் பிரதம நீதீயரசர் மொகான் பீரிசும் இடம்பெற்றிருந்ததற்க்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இலங்கையின் சட்டத்தரணிகள் அமைப்பு.
பிரதம நீதீயரசர் இக்குழுவிற்க்குள் உள்வாங்கப்பட்டது நாட்டின் நீதீத்தறையின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதித்துறையின் நலனை காப்பதற்காக நீதிபதிகள் அரசாங்கத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்,என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. gtn

2 comments:

  1. நாட்டில் நீதி அரசியல்வாதிகளின் சட்டைப்பைக்குள் இருக்கின்றது.

    ReplyDelete
  2. இதுபோன்ற திருடர்கள் ஆட்சியாளர்களின் சிபாரிசு பெற்ற பின்னர்தான் நாடு எல்லாவகையிலும் நாசமாகிக்கொண்டிருக்கின்றது. இலங்கையின் நன்மதிப்பும் சீரழிந்து விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.