Header Ads



மஹிந்த அரசாங்கம் பாலுாட்டி பாதுகாத்துவரும் பொதுபலசேனா - ஹஸனலி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

நாட்டில் தமிழ், முஸ்லிம் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான இனவாத அடக்கு முறைகளை கையாண்டு கடந்த காலங்களில் சிங்கள பேரினவாத செயற்பாடுகளை கையாண்ட இந்த அரசாங்கத்தை வீழ்த்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேலைத்திட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். என ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹஸனலி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியினை சம்மாந்துறை பிரதேசத்தில் மீளக்கட்டியெழுப்புதல், கட்சியின் கட்டமைப்பை உருவாக்குதல் சம்பந்தமாக கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடனான கலந்துரையாடலொன்று நேற்று கனிக்கிழமை (25) அமைப்பாளர் ஹஸனலியின் இல்லத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- இந்த அரசாங்கத்தின் தன்னிச்சையான அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டின் ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட வேண்டும். என்பதில் நாட்டு மக்கள் அனைவரும் அக்கறை கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஜனதிபதி மஹிந்தவை தோற்கடிப்பதற்கான  ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேலைத்திட்டத்தில் இன்று பல்வேறு கட்சிகள் ஒன்றினையத் தொடங்கியுள்ளன்.

நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில் மஹிந்த அரசாங்கத்தினைால் பாலுாட்டி பாதுகாத்துவரும் பொதுபலசேனா போன்ற அடிப்படைவாத பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்பினரைக் கொண்டு சிறுபான்மை மக்களை நசுக்கி சர்வாதிகாரம் புரிந்து வருகின்றது.

நாட்டில் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த இனங்கிடையிலான ஐக்கியத்தை தற்போதைய அரசாங்கம் வேரொடு பிடிங்கி எறிந்துவிட்டது.

இன்று நாட்டில் பல்வேறு வழிகளிலும் மக்களிடம் செல்வாக்கினை இழந்துள்ள இந்த அரசாங்கம் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நாட்டின் பொருளாதாரத்தை இலக்காக கொண்டதல்ல. தேர்தலை மாத்திரம் இலக்காக கொண்டுள்ளது. இந்த அரசாங்கம் சலுகைகளைக் காட்டி மக்களை ஏமாற்ற முற்பட்டுள்ளனர் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னம் முடிவெடுக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கூறுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலுள்ளது. இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படகின்றேன் என்று கூறிய ஹக்கீம் இன்று அரசாங்கத்தைப் பலப்படுத்தும் வகையிலே செயற்பட்டு வருகின்றார்.

எனவே, எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை மக்கள் புத்திசாதுர்யமாகப் பயன்படுத்தி மஹிந்தவின் அரசை வீழ்த்த வேண்டும். சர்வாதிகார போக்கில் இருந்து நாட்டைக் காப்பாத்தும் அதிகாரப் பகிர்வினுாடான ஜனசாயகத்தை நோக்கி பயணிக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டும். என்றார்.

No comments

Powered by Blogger.