முஸ்லிம்கள் ''சிங்ஹலே'' யில் வாழும் மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்...!
பாராளுமன்றம் செல்ல பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நிலைமை நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் நூற்றுக்கும் மேலானோர் க.பொ.த. (சா/த) மற்றும் உயர்தரம் சித்தியடையாதோராகவே உள்ளனர் என்றும் பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கல்விமான்களை உள்ளடக்கிய உயர் சபையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கீழ் சபையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் அதன் போது உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பொதுபல சேனா தயாரித்துள்ள கொள்கை வரைவிலக்கணத்தை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இங்கு கொள்கை வரைவிலக்கணங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
பாராளுமன்றத்தில் இன்று உறுப்பினர்களாக உள்ளோரில் நூற்றுக்கு மேற்பட்டோர் க.பொ.த. (சா/த) உயர்தர பரீட்சையில் சித்தியடையாதோரே உள்ளனர்.
இந் நிலைமை மாற வேண்டும். எதிர்காலத்தில் பட்டப்படிப்பு படித்தோரே பாராளுமன்றம் வர முடியும் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு கல்விமான்களை உள்ளடக்கிய உயர் சபையும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய கீழ் சபையும் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஊழலற்ற அபிவிருத்தி ஒழுக்கம் விசேடமாக சிங்களவர்களின் தனித்துவம் மற்றும் அடையாளத்தை பாதுகாத்தல் அத்தோடு இங்கு வாழும் ஏனைய இனங்களுக்கு சம உரிமைகளை வழங்குவது என்ற நான்கு முக்கிய விடயங்களை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். 1815 ஆம் ஆண்டுக்கு முன்பு இலங்கையில் சிங்கள பௌத்த ராஜ்ஜியமே காணப்பட்டது.
அந்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு இன்றைய தேசியக் கொடியை கைவிட்டு 1815 க்கு முன்பிருந்த தேசியக் கொடி கொண்டு வரப்பட வேண்டும்.
இலங்கை என்ற பெயர் மாற்றப்பட்டு சிங்ஹலே எனப் பெயரிடப்பட்டு இங்கு வாழும் தமிழ் முஸ்லிம்கள் சிங்ஹலேயில் வாழும் மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
சிங்கள பௌத்த கலாசாரமே இங்கிருக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சுதந்திரம். ஆனால், அதிக சுதந்திரம் விசர் நாய் சுதந்திரமாக இருக்கக்கூடாது.
சமஷ்டி முறைமைக்கும் பிரிவினைக்கும் இங்கு இடமில்லை என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.
.jpg)
சட்டமும் ஒழுங்கும் நாட்டில் சரியாக செயல்படவில்லை என்பதை காட்ட இதைவிட வேறென்ன வேண்டும். இலங்கை இவங்கட தாத்தா வீட்டு சொத்துப்போல கண்ட நாயெல்லாம் என்னென்னவோ சொல்லுது.
ReplyDeletedei neeye oru visar naay onda kootamum visar naay
ReplyDeleteintha karuttai teriwikkum intha para naai oru pikku kidayaze iwanukku anna wela intha pikku koottathoda.
ReplyDeleteமூளை வளர்ச்சி போதியளவு இல்லாத காரணத்தினால்தான் வெறியர்கள் இப்படி வெட்டி மீட்டிங் நடத்துறானுகள்
ReplyDeleteமக்களிடம் பணம் வசூல் செய்து இவர்களுக்கு இலவசமாக அங்கர் பெடியாப்ரோ (anchor pediaPro )வழங்க வேண்டும்
அப்போதாவது புத்தி வருமா என்று பார்ப்போம்