சீனாவில் துவக்கப்பட்டுள்ள விசித்திரமான ''கழிப்பறை'' உணவகம் (படம்)
விசித்திரமான வடிவமைப்பிலான உணவகங்களுக்கு, சீனாவின் பீஜிங் நகரம் பிரபலமானது. இங்குள்ள குங்பூ உணவகத்தில், உணவு பரிமாறுவோர், குங்பூ இயக்கங்களைக் காட்டுவர்.
இது தவிர, 80களில் செயல்பட்ட பள்ளிகளைப் போன்று ஒரு உணவகத்திற்கு செல்வோர், தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். ரிகா நகரில் செயல்படும், மருத்துவமனை போன்ற உணவகத்தில் பரிமாறுபவர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகளைப் போன்று உடையணிந்து இருப்பர். இங்கு வழங்கப்படும் உணவுகள், மனித உடல் உறுப்புகளைப் போன்ற பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது.
காபி ஷாப்கள்அந்த வரிசையில், சீனாவின் பீஜிங், ஷாங்காய், ஹாங்ஜூ நகரங்கள் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான் நாடுகளிலும், கழிப்பறை போன்ற காபி ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் துவக்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையுடன் கூடிய குளியலறையில் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், தரை மற்றும் சுவர்களுக்கு, பாத்ரூம் டைல்ஸ்களும், கதவுகளில் டாய்லட் பேப்பர் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் பரிமாறப்படும், நுாடுல்ஸ், இறைச்சி, சைவ உணவுகளுடன், சுருண்ட பிரவுன் நிற பின்னல் போன்ற ஐஸ்கிரீம்களும் பிரபலமானவை. பார்ப்பதற்கு மனிதக் கழிவுகள் போல தோற்றமளிக்கும் இவை, டாய்லெட் வடிவிலான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது.
சீனாவின் பீஜிங், ஷாங்காய் மற்றும் ஹாங்ஜூ நகரங்கள் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான் நாடுகளிலும், டாய்லெட் வடிவிலான காபி ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆச்சர்யம்:சீனாவில் இயங்கும் உணவகங்களில் கழிப்பறை வசதி கிடையாது; இங்கு வரும் வாடிக்கையாளர்கள், உணவகத்திற்கு வெளியில் உள்ள பொதுக் கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டும்.புதிதாக திறக்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகங்களுக்கு முதன் முறையாக வருபவர்கள், ஏராளமான கழிப்பறைகளைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர்.

Post a Comment