Header Ads



ஆங்கில தினப் போட்டியில், தேசிய மட்டதிற்கு தெரிவு

அண்மையில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப் போட்டியில் (English Day) கிண்ணியா மகளீர் கல்லூரியில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி  செல்வி எம். எஸ். சஹாமா கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் சதாத் கரீம், சமீனா ஆசிரியை ஆகியோரின் புதல்வியுமாவார். மேலும் ஆங்கில தினப்போட்டியில் இம்மாணவி கோட்டம், வலையம் மாகாணம் என்பவற்றுக்குபங்குபற்றி   தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்      

இதேவேளை இந்த ஆங்கில தினப் போட்டியின் தேசிய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 11.10.2014ம் திகதி சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 


1 comment:

  1. Congrats Shahama!

    We all proud of you and wish you to win in the National level too.

    ReplyDelete

Powered by Blogger.