Header Ads



சோபித்த தேரருக்கும், விமலஜோதி தேரருக்கும் வாக்குவாதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ள மாதுலுவாவே சோபித்த தேரருக்கும் பொதுபலசேனாவின் ஸ்தாபக தலைவர் கிராம விமலஜோதி தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற பெல்லன்ன ஞானவிமல தேரரின் மரணக்கிரியையின் போது இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வுக்கு சோபித தேரர் வருகைத்தந்த போது விமலஜோதி தேரர் வயதுக்கு பெரியவர் என்ற அடிப்படையில் எழுந்து நின்று சோபித தேரருக்கு மரியாதை செலுத்தினார்.

எனினும் தம்மீது தாக்குதலை நடத்தும் பொதுபலசேனா ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செலுத்துவதில் எவ்வித பிரயோசனமுமில்லை என்று சோபித தேரர் குறிப்பிட்டார்.

இதன்போது வாக்குவாதம் புரிந்த விமலஜோதி தேரர்,  தாம் சோபித தேரருக்கு எதிரானவர் அல்ல. எனினும் காவியுடை அணிந்துக்கொண்டு செயற்படும் அரசசார்பற்ற அமைப்பினரை தமக்கு பிடிக்காது என்று குறிப்பிட்டார்

இதனையடுத்து சோபித தேரரும் தர்க்கம் புரிந்த பின்னர் வேறிடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டார்

முன்னதாக பொதுபல சேனாவுடன் முரண்பட்டிருந்த விமலஜோதி தேரர் தற்போது மீண்டும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.