Header Ads



ஜம்மியத்துல் உலமாவின் விளக்கமும், முஜீபுர் ரஹ்மானின் அறிக்கையும்..!

12.10.2014

செய்தி ஆசிரியர்,

ஜப்னா முஸ்லிம் இணையதளம்,

உங்களது இணையதளத்தில் வெளியான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளோ பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்து அல்-குர்ஆன் பிரதிகளை எடுத்துச் செல்லவில்லை. இவ்வாறு வெளியான செய்தியை கண்;டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது விசனத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு எம்மிடம் சிங்கள, ஆங்கில அல்குர்ஆன் பிரதிகளை கேட்டு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியது. இக்கடிதத்தை கொண்டுவந்து ஒப்படைத்த அதிகாரி ஏதேனும் முறைகேடாக நடந்துகொள்ளவில்லை. அப்பிரதிகள் கிடைத்தால் அறிவிக்குமாறும் அதனை வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். ஆதன் பின் இரண்டு நாட்கள் கழித்து நாம் தொடர்புகொண்டு அறிவித்ததன் பேரில் அவ்வதிகாரிவந்து நாம் வழங்கிய சிங்கள, ஆங்கில பிரதிகளை பெற்றுச் சென்றார். அதுவன்றி எவரும் உள்ளே நுழைந்து அடாவடிமத்தனம் புரியவில்லை என்பதையும் அறியத்தருகிறோம்.

அல்-குர்ஆனை கேட்டுவரும் ஒருவருக்கு அதனை கொடுக்க மறுப்பது பொருத்தமற்ற செயலாகும். அதனைப் பெற்று யாரும் படிப்பினை பெறுவதாக இருந்தால் அது அல்-குர்ஆனின் தனிச் சிறப்பேயாகும். மேலும் நம்நாட்டுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் ஜனீவா சென்றமையையும் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முன் அனுமதியின்றி நினைத்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திக்கும் செல்வாக்கு பெற்றவர் என்ற பிழையான கருத்தையும் மேற்குறித்த விடயத்துடன் முடிச்சுப்போட்டு பிரச்சினைகள் உருவாக்காதிருக்குமாறும் இவற்றின் மூலம் அரசியல் இலாபம் அனுபவிக்க நினைப்போருக்கு துணைபோகாதிருக்குமாறும்  கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் முஸ்லிம்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் தேவைகளுக்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் சந்திக்கும் என்பதையும் அறியத்தருகின்றோம்.  மேலும் நீங்கள் வெளியிட்ட பிழையான தகவலை நீக்கிவிடுமாறும் தகவல்களை வெளியிடும் போது அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் - ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அல்குர்ஆனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பெற்றமைகொண்டமை அதனை கைது செய்தமைக்கு ஒப்பானதாகும் என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்

அல்குர்ஆன் பயங்கரவாதத்தை பரப்புவதாக பொதுபல சேனா அமைப்பினர்  பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அல்குர் ஆன் பிரதிகளை உலமா சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அல்குர்ஆன் முழு உலக மக்களுக்குமான நூலாகும். அதனை பார்ப்பதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கின்றது. எனினும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் ஒரு பிரிவான பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தற்போது எதற்காக குர்ஆனை பெற்றுக்கொண்டனர் என பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியோ அல்லாது அவ்வமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷயோ விளக்கமளிக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் கேரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ' உலமா சபையிடமிருந்து அல்குர்ஆனின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகளை பெற்றுள்ளனர். பொது பல சேனா அமைப்பினர் அண்மைக்காலமாக குர்ஆனை அவமதித்து வருகின்றனர். இந்நிலையில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனை செய்யாது  புனித நூலான குர்ஆனை பயங்கரவாத பிரிவினர் பெற்றுக்கொண்டமையை எம்மால் அனுமதிக்க முடியாது. 

 குர்ஆனை தனிப்பட்ட ரீதியில் வாசிக்கவே ஆராய்வதற்கோ எந்த தடையும் கிடையாது. எனினும் பயங்கரவாத சாயம் பூசப்பட்டதன் பின்னர் உலமாசபையிடமிருந்து பெற்றுக்கொண்டமையே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 
தேர்தலொன்று வருகின்ற நிலையில் ஜனாதிபதியால் தேசிய நல்லிணக்கத்திற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலேயே இவ்வாறு குர்ஆன் பிரதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

2 comments:

  1. மேற்படி செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் கண்ட போது மிக விசனம் அடைந்தேன். இன்னும் பல வாசகர்கள் படித்தது மட்டுமல்லாமல் பரப்பியும் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
    எனினும் Jaffna Muslim ஜம்மியத்துல் உலமா சபையின் விளக்கத்தை இன்று பிரசுரித்தது மிக வரவேற்கத்தக்க ஒன்றாகும். நன்றி.
    இவ்வாறான உணர்சிகளைதுண்டக்குடிய செய்திகளை பிரசுரிக்காது தீர விசாரித்ததன் பின் மாத்திரமேவளையத் தளத்தில் புகுத்த வேண்டும் என வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. ITHAI THAWARAAHA ADUKKA MUDIYAATHU AWERKALUM QUR,AANAI AARAAINTHU PAARKKATTUM ATHAN PIN AWERKAL KARUTHTHAI WELIYIDUWAARKAL APPO PAARKALAAM BBS DA KARUTHTHUM EWERKALIN KARUTHTHUM ENNAWENTRU

    ReplyDelete

Powered by Blogger.