முஸ்லிம்களின் பிரார்த்தனைகள் சமாதானத்திற்காக இருக்குமென்பதில் சந்தேகமில்லை - மஹிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்து
புனித அல்குர்ஆனின் போதனைகளுக்கேற்ப இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களது சமய போதனைகள் மூலம் கிடைத்த இந்த ஐக்கிய உணர்வு அவர்களை எமது நாட்டின் முன்னேற்றத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்யத் தூண்டியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :-
உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களும் கொண்டாடும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
முஸ்லிம் மக்கள் தமது நாளாந்த ஐவேளைத் தொழுகையின் போது முன்நோக்குகின்ற திசையான புனித மக்கா நகரில் இலட்சக் கணக்கானவர்கள் ஒன்றுசேரும் புனித ஹஜ் உலகெங்கிமுள்ள முஸ்லிம் மக்களின் மிகவும் முக்கியமான வருடாந்த நிகழ்வாகும்.
பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளையும் கலா சாரங்களையும் உடைய இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவததையும் இஸ்லாம் இவ்வுலகிற்குக் கொண்டுவந்த ஆன்மீக உணர்வையும் பறைசாற்றுகின்ற காட்சி ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் ஊடாக ஆயிருக்கணக்கான இலங்கை முஸ்லிம்களும் இந்த வருடாந்த ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் புனித அல்குர்ஆனிதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கான தமது அர்ப்பணங்களை புதுப்பித்து உலகெங்குமுள்ள மக்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் புரிந்துணர்வு நிலவ வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர்.
இந்த விசேட தினத்தில் முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகள் எல்லா மக்களினதும் சமாதானத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்கள்.

thank you very much for your wish excellancy president.
ReplyDeletemay allah give hidayath for whole mankind.save us from jellous and our eneime.
இலங்கைவாழ் முஸ்லீம்களின் தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாளைக்கொண்டாடுவதர்க்காக இண்றைய தினத்தினை (October 6, 2014) அரச பொதுவிடுமுறை தினமாகவும் மட்டுமல்லாது நாளையதினத்தினை (October 7, 2014) முஸ்லீம் பாடசாலைகளுக்கான விடுமுறை தினமாகவும் இலங்கையில் பிரகடனப்படுத்திய எமது நாட்டின் அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் எமது கௌரவத்துக்கும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முஸ்லீம்களாகிய நாங்கள் எங்களது உளமார்ந்த நன்றிகளை இத்தினத்தில் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். மட்டுமல்லாது உங்களுக்காக நாங்கள் கைங்கரியம் செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
ReplyDeleteAbthul Kaneem Musthaffa,
ReplyDeleteநீங்கள் 'பட்டுவேட்டி பற்றிய கனாவிலிருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்படும்' என்ற வைரமுத்துவின் கவிதை வரியைப் படித்ததில்லையா..?
samathanatha tholaikka vechazu ongada thambi thaan. so muslim ask dua samathanam now
ReplyDelete