ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் - JVP
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என ஜே.வி.பி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சித்தால் வழக்குத் தொடரப்படும் என கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியான அல்லது தார்மீக ரீதியான உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும்,அவ்வாறு போட்டியிட முயற்சித்தால் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என ஜே.வி.பி சட்டத்தரணியும், மேல் மாகாணசபை உறுப்பினருமான சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
17ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும், 18ம் திருத்தச் சட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவித்தால் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். GTN
.jpg)
Post a Comment