ஐபேட் உபயோகிக்க, தனது குழந்தைகளுக்கு அனுமதி மறுத்த 'ஆப்பிள்' ஸ்டீவ் ஜாப்
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் மறைந்த ஸ்டீவ் ஜாப் தனது குழந்தைகளுக்கு ஐ பேட் வைத்திருக்க அனுமதி தரவில்லை எனவும் குழந்தைகள் விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்துவதில் எல்லையை தாண்ட கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க பத்திரிக்கையின் கட்டுரையாளர் நிக் பிலிடன் கூறுகையில்,
2010ல் ஐ பேட் அறிமுகமான சமயத்தில் ஸ்டீவ் ஜாப் 12 மற்றும் 15 வயதுடைய தன் பிள்ளைகளுக்கு ஐபேட் வைத்து உபயோகிக்க அனுமதி மறுத்து விட்டார் என்றார் ஆனால் குழந்தைகளுடன் புத்தகங்கள் மற்றும் வரலாறு குறித்து உரையாடுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் ஆப்பிள் ஐபேட் புகழ் பரவ செய்த ஸ்டீவ் ஜாப் தனது குழந்தைகளுக்கு மறுத்துள்ளார் என்ற செய்தி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Post a Comment