ஜனாதிபதி மஹிந்தவின் முக்கியமான வாக்குறுதி..!
கடல் நீரின் உப்புத்தன்மையை அகற்றி அதனை பூரணமாக சுத்திகரித்து முழு நாட்டிற்கும் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த வருடம் மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொனராகலையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, மொனராகலை மடுல்கலை பகுதியில் பொதுசந்தை வர்த்தக நிலையத் தொகுதியும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிற்கமைய ஒப்பே கொடை - மத்திய மகா வித்தியாலயம், பகினாகாவெலை - முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், யசோதரா - மகளிர் மத்திய மகா வித்திலயாலயம், விபுலானந்தா - மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப கூடங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;
மாலைதீவு போன்ற நாடுகள் பலவற்றில் மேற்படி குடிநீர் விநியோக வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம்மால் நடைமுறைப்படுத்தப்படும் அவ் வேலைத்திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் வரட்சியினால் ஏற்படும் சுத்தமான குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு பூரணமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் மொனராகலை மாவட்டத்தில் சில கிராமங்களுக்கு இன்னும் மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாமை குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வருட இறுதிக்குள் அக்கிராமங்களுக்கு மின்சார வசதிகள் பூரணப்படுத்தப்படும் என்றார்.

no problem-exiam bank is looking for customers......... china exim bank would come as well as the commission to out uo another hoatel in dubai or madras................
ReplyDelete