Header Ads



"இது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு யுத்தம்" அல் நுஸ்ரா

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க கூட்டணி முன்னெடுக்கும் வான் தாக்குதல்களை கடுமையாக கண்டித்திருக்கும் சிரிய கிளர்ச்சிக் குழுவான அல் நுஸ்ரா முன்னணி "இது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு யுத்தம்" என்று குறிப்பிட்டுள்ளது.

அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட அல் நுஸ்ரா, இணையதளத்தின் ஊடே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், உலகெங்கும் இருக்கும் ஜpஹாத் போராளிகள் இந்த கூட்டணியில் இணைந்திருக்கும் மேற்குலக மற்றும் அரபு நாடுகளை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்துமாறு கோரியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கூட்டணி, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவை இலக்குவைத்தே பிராந்தியத்தில் தீவிர வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமையும் சிரியாவின் ரக்கா மற்றும் துருக்கி எல்லைப் பகுதியில் ஐ.எஸ். குழுவை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான ஐ.எஸ். எதிர் கூட்டணியில் அரபு நாடுகள் உட்பட சுமார் 40 நாடுகள் இணைந்துள்ளன. வடகிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக்கின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியிருக்கும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை அழிக்க இந்த கூட்டணி உறுதிபு+ண்டுள்ளது.

எனினும் இரு எதிர் அமைப்புகளான ஐ.எஸ். மற்றும் நுஸ்ரா முன்னணி அண்மைக்காலத்தில் சிரியாவில் கடுமையாக பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அல் நுஸ்ரா முன்னணி பேச்சாளர் அபு+ பிராஸ் அல் சுரி கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

"இந்த நாடுகள் ஒரு பயங்கரமான செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த நாடுகள் உலகெங்கும் ஜpஹாதிக்களின் இலக்காக மாறியுள்ளன. இது அல் நுஸ்ராவுக்கு எதிரான யுத்தமல்ல. இஸ்லாத்திற்கு எதிரான ஒரு யுத்தம்" என்றார்.

சிரியாவில் ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் அல் நுஸ்ரா மற்றும் ஐ.எஸ். கிளர்ச்சிக் குழுக்கள் ஒரு சிக்கலான வலையமைப்பைக் கொண்டவையாகும். இதில் அல் நுஸ்ரா தமது இலக்கு என்று அமெரிக்கா குறிப்பிடாத போதும் ஐ.எஸ். எதிர் கூட்டணியின் யுத்த விமானங்கள் அல் நுஸ்ராவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துகின்றன.

இந்த கூட்டணி நாடுகள் மீது தாக்குதல் நடத்தும்படி ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களும் ஏற்கனவே ஜpஹாத் போராளிகளை கோரி யுள்ளனர்.

No comments

Powered by Blogger.