Header Ads



கொழும்பில் இராணுவ சிப்பாய் தீக்குளித்து உயிரிழந்தமைக்கு பொதுபலசேன காரணமா..?

Gtn

நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கொள்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இராணுவ சிப்பாய் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தமைக்கு பொதுபலசேன காரணமாக இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய கலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பியசேன என்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தீக்குளித்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்தார்.

அதேவேளை தீக்குளிக்கும் எண்ணத்துடன் இந்த இராணுவ சிப்பாய் இருக்கவில்லை என்றும் வேறு நபர்களுடைய வற்புறுத்தலினால் தீக்குளித்திருக்கலாம் எனவும் உறவினர்கள் பொலிஸாரிடம் சந்தேகம் தெரிவித்ததாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

இராணுவச் சிப்பாயின் மரண விசாரணையின்போது உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர் என்றும் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீக்குளித்து காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பொதுபலசேன உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த சமயத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கன்டி தலதாமாளிகை வளாகத்தில் கடந்த ஆண்டு புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தமைக்கும் பொதுபலசேன காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. 72 வயோதிபர் ஒருபோதும் தீக்குழிக்க எண்ண மாட்டார் அவரை யாரோ தீக்குழிப்பாட்டியுள்ளார்கள். இலங்கைக்கெதிராக நவனீதம் பிள்ளை செயற்படுவதை எதிர்த்தே அவர் தீக்குழித்ததாக சொல்லப்பட்டது. இக்காரணத்தை சிறு குழைந்தையால் கூட ஏற்றுக்கொள்ளப்படாது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு பாரிய சதி ஏற்பாட்டாளர்கள் உள்ளார்கள். அவர்கள் அரசியல் சகபாடியாகவும் இருக்கலாம். அல்லது மேலிடத்தோராகவும் இருக்கலாம்.

    ReplyDelete
  2. இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..
    எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது.
    உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், குடிகாரன் உயிருடன் இருப்பது தெரிந்தது.
    பிறகு அவன் 10 வருடங்கள் உயிருடன் இருந்தான்.
    பின்னர் அவன் இறந்து ஈமச் சடங்குகள் நடந்து மறுபடியும் சவப்பெட்டி வெளிக் கொணரப்படும் போது மனைவி அலறினாள்..
    "இந்தத் தடவையாவது இடிக்காமக் கொண்டு போங்கடா தெண்டக்காரப் பசங்களா'

    ReplyDelete

Powered by Blogger.