Header Ads



''ஆதம் நபியும், இலங்கையும்'' - ஆய்வு நடாத்த நடவடிக்கை

உலகின் முதல் மனிதனான ஆதம் பற்றிய ஆய்வு நூலொன்றை இஸ்லாமிய குர் ஆனிய கண்ணோட்டத்தில் தயாரிப்பதற்கு இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையம் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.

இதற்காக தனியான ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையத்தின் தலைவர் எம்.அஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஆதிபிதா ஆதம் நபி குறித்து பல மதத்தினரும் பல்வேறு கண்ணோட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் ஆதமை முதல் மனிதராக மட்டுமல்ல அவரை இறைவனின் முதல் நபியாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த அடிப்படையில் குர்ஆனிய கண்ணோட்டத்தில் ஆய்வொன்றை மேற்கொண்டு ஆதாரபூர்வமான  தகவல்களை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமென அஷ்ரப் ஹுசைன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதம் கால்பதித்த மலை ஆதம்மலை  இலங்கையில்தான் இருக்கின்றது. இப்னு பதூதா இலங்கை வந்தபோது இந்த மலைக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் ஆதம் நபியவர்கள் பற்றிய தகவல்கள், ஆதம்மலை குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி உதவினால் இந்த ஆய்வுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையிலேயே ஆய்வு மேற்கொள்ளப்படுமெனவும் இதில் 'இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்'ஆதம் நபியும் இலங்கையும்' என்ற கருப்பொருளைக் கொண்டதாக உள்வாங்கப்படுமெனவும் தெரிவித்த அஷ்ரப் ஹுசைன் ஆய்வைப் பூர்த்தி செய்ததும் அதனை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விபரங்கள், தகவல்கள் அனுப்ப வேண்டிய முகவரி;

இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையம்,
இல. 22, ரொஸ்மீட் பிளேஸ்,
கொழும்பு 07.

2 comments:

  1. மர்ஹூம் மௌலவி S L M ஹசன் அவர்கள் ஒரு முறை தனது உரையில் தான் எகிப்து அல் அஸ்ஹர் பல் கலைக் கழகத்தில் கற்கும் சமயம் அங்குள்ள நூலகத்தில் ஆதம் (அலை) அவர்களுடைய பாதம் பதியப் பட்டிருப்பது பற்றிய குறிப்புகள் உள்ள ஒரு நூலை வாசித்ததாக விளக்கம் அளித்தார்கள். எனவே இப்பொழுது அங்கு கற்கும் யாரவது இலங்கையர் இருப்பின் இந்தப்பணிக்கு அவர்களது உதவியை நாடலாம்.

    ReplyDelete
  2. இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையத்தின் email address ஐ தந்தால் இலகுவாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.