Header Ads



அமெரிக்காவில் பெண்ணின் படுக்கையில் பிரமாண்ட குளவி கூடு (படம்)


அமெரிக்காவில் பெண் ஒருவரின் படுக்கை அறையில் 5 ஆயிரம் குளவிகள் சேர்ந்து பிரமாண்ட கூடுகளை கட்டியுள்ளன. அமெரிக்காவில் வர்ஜினியா மாகாணத்தில்  வின்செஸ்டர் நகரம் உள்ளது. கிரெய்க் மலைத்தொடரை ஒட்டிய வனப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. அமெரிக்காவில் அப்பகுதியில் தற்போது கோடை காலம் என்பதால், வின்செஸ்டர் நகரை சேர்ந்த 55 வயதான பெண், தன் வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் படுக்கையை சுத்தம் செய்ய விரும்பினார். இதுகுறித்து தனியார் பூச்சிக்கொல்லி தடுப்பு நிறுவனத்துக்கு தகவல் அளித் தார். ஜான் பிர்கெட் என்பவர் தலைமையில் நேற்று முன்தினம் அந்த பெண் ணின் வீட்டுக்கு வந்து, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள படுக்கையறையை அவர்கள் திறந்ததும் அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

அந்த அறையில் படுக்கை முழுவதும் பிரமாண்டமாக குளவிகள் கூடு கட்டியிருந்தன. தலையணையிலும் முக்கால் அடி ஆழத்துக்கு துளையிட்டு, அதிலும் குளவிகள் கூடு கட்டியுள்ளன. அந்த கூட்டினுள் குளவிகளின் 5 ஆயிரம் கூட்டு புழுக்களும், 500& க்கும் மேற்பட்ட ராணி குளவிகளும் காணப்பட்டன.நாங்கள் கவச உடை அணிந்து, அவற்றை ஒரு நாள் முழுவதும் வேலை செய்து அகற்றினோம். எனது 40 ஆண்டு கால அனுபவத்தில், இதுபோன்ற பிரமாண்ட குளவி கூடுகளைப் பார்த்ததில்லை என்று ஜான் பிர்கெட் அதிர்ச்சியுடன் கூறினார்.

No comments

Powered by Blogger.