Header Ads



அரசாங்கத்தை மாற்ற தயங்கமாட்டோம் - பொதுபல சேனா

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் மாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் தலைவர் கிரம விமலஜோதி, இலங்கை ஒரு பல்லின நாடால்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த நாடு, பௌத்த நாட்டில் அது இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின்  அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

பௌத்தர்களின் கரிசனைகள் குறித்த ஆவணமொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளோம், அரசாங்கம் அதற்க்கு தீர்வை காணவிட்டால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என  குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. ஜனாதிபதியின் சகோதரர் அரவணைப்பின் உருவெடுத்த பொது பலசேனவை ஜனாதிபதி கண்டு கொள்ளாமல் விட்டதன் பலன் இன்று ஜனாதிபதிக்கும் அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது,
    அது மட்டுமல்லாமல் நாட்டில் ஒரு புரட்சியையும் பேரழிவையும் உண்டாக்க்கும் நோக்குடன் பொது பலசேன மூம்மூரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றதை. ஜனாதிபதி தடுத்து நிறுத்தாவிடின் நாடு இன்னும் படு மோசமானதொரு நிலைக்கும் தள்ளப்படும். இதற்கு முக்கிய காரணமாகவுள்ள ஜனாதிபதியின் சகோதரரின் தீவிரச் செயற்பாட்டில் ஜனாதிபதி கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டியதன் இறுதிக்கட்டத்தில் இருப்பதை உணரவேண்டும்.

    ஒரு நாட்டின் தலைவரின் சொந்த பெயருக்கு கழங்கம் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் நோக்கிலாவது கண்டிப்பாக இக்காரியத்தில் ஜனாதிபதி தீர்கமானதொரு முடிவை எடுப்பார் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கின்றது. காரணம் புரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.