Header Ads



முஸ்லிம் கவுன்சில் குறித்து, பொதுபல சேனா குற்றச்சாட்டு..!

பொதுபலசேனாவின் உச்சி மாநாடு குறித்து பல்வேறு அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள பொதுபலசேனா. இனவாதிகளும், தீவிரவாத சக்திகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் மாநாட்டை குழப்ப முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளது.

மியன்மார் மத குருவின் இலங்கை விஜயம் குறித்து இஸ்லாமிய கவுன்சில் விடுத்துள்ள அறிக்கை முஸ்லீம் சமூகத்தை பௌத்தர்களுக்கும், பௌத்தமதகுருமாருக்கு எதிராகவும் தூண்டிவிடும் முயற்சி என்றும் பொதுபலசேனா குற்றம்சாட்டியுள்ளது.

இவ்வாறான செயல்கள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம், சர்வதேச பௌத்த சமூகத்திற்க்கு நாங்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே விராது எங்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சம்மதித்தார்.

இது குறித்து முஸ்லீம் சமூகம் குழப்பமடையதேவையில்லை, என பொதுபலசேனா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் பௌத்தர்கள் இவ்வாறான குழுக்களினால் திட்டமிடப்படும் பொறிக்குள் சிக்க கூடாது எனவும் எச்சரித்துள்ள அந்தஅமைப்பு  பௌத்தர்கள் நாடடை கட்டியெழுப்ப முயலவேண்டும், அழிக்க முயலக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லீம் அமைப்புகள் சமாதானசகவாழ்வு போன்ற பதங்களை பயன்படுத்துகின்ற போதிலும் அவர்கள் நாட்டை அழிக்க கூடிய இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர், என குறிப்பிட்டுள்ள பொதுபலசேனா தன்னை விமர்சித்த நாடர்ளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்கவை சந்தர்ப்பவாத அரசியல் வாதிக்கான உதாரணம் என குறிப்பிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.