முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் இடமாற்றப்படுமா..?
இஸ்லாத்தின் இரண்டாவது புனித தலமான மதீனாவின் மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசலில் உள்ள இறைத்தூதர் முஹமது நபியின் அடக்கஸ்தலத்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்று குறித்த செய்தி சர்வதேச ஊடகங்களில் கசிந்து ள்ளது.
சவு+தி அரேபியாவின் முன்னணி அறிஞர் ஒருவரின் ஆலோசனை ஆவணம் ஒன்றிலேயே இது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம் பள்ளிவாசல் மேற்பார்வையாளர்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் சர்வதேச அளவில் முஸ்லிம்கள் மத்தியில் பிளவு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புனிதத் தலங்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்களை அழிக்கும் சவு+தி நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்துவரும் சவு+தியின் மற்றுமொரு முன்னணி அறிஞரே இந்த விடயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதில் சர்ச்சைக்குரிய திட்டங்கள் உள்ளடக்கிய, சவு+தி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டிருக் கும் 61 பக்க ஆவணம் தொடர்பான விபரம் 'தி இன்டி பென்டன்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் இறைத்தூதர் முஹமது நபியின் அடக்கஸ்தலம் அருகில் இருக்கும் அல் பக்கி அடக்கஸ் தலத்திற்கு மாற்றப்பட்டு தமது தோழர்களின் அடக்கஸ் தலங்களுடன் அடையாளம் இன்றி விடப்படவிருப்பதாக மேற்படி பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சவு+தி நிர்வாகம் இந்த பரிந்துரைக்கு அமைய செயற்படுவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை என்றபோதும் கடந்த காலங்களில் அல் பக்கி அடக்கஸ்தலத்தில் இருக்கும் முஹமது நபியின் தோழர்களது அடக்கஸ்தலங்கள் அகற்றப்பட்டது போன்ற நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சவு+தி அரசு கடந்த காலங்களில் மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசல் உட்பட இஸ்லாமிய தலங்களில் மாற்றங்கள் பலவற்றை கொண்டுவந்துள்ளது. அல் பக்கி அடக்கஸ்தலத்தில் இருந்த இறைத்தூதரின் தந்தை உட்பட பல உறவினர்களினதும் உடல் எச்சங்கள் 1970களில் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் 1924 ஆம் ஆண்டில் அங்கு அடக்கப்பட்டிருக்கும் இறைத்தூதரின் தோழர்களது அடையாளங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் இஸ்லாமிய மரபுரிமை தொடர்பான ஆய்வு அறக்கட்டளையகத்தின் தலைவரான டொக்டர் அலவி, தி இன்டிபென்டன் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.
உஸ்மானிய பேரரசு காலத்து மதச்சின்னங்களை அழிக்கும் முயற்சியில் சவு+தி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக மேலும் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மஸ்ஜpத் அல் நபவி பள்ளிவாசலின் தனித்துவமான பச்சைநிற குவிவுமாடமும் அகற்றப்படவிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. அதேபோன்று உஸ்மானிய பேரரசு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறைத்தூதரின் அடக்கஸ்லத்தை ஒட்டியிருக்கும் அலங்காரங்களும் அகற்ற முயற்சி மேற் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

they should not shift. but, they should demolish the building and decoration and just leave the grave and seal it and not to allow any one to worship.
ReplyDeleteMay Allaah protect Prophet Muhammad (SAW) grave as in the past. Please understand that enemies of Islam want to remove the love of our beloved Rasool (SAW) from our heart that's why they destroyed graves of Prophet (SAW) family in Jennathul baki and Jennathul mahalaah. If the shabhas want they should have done it but this madina was protected till the khilafath rule that ended in the early this centuary.
ReplyDeletePlease understand we worship only Allaah and we give due respect to our beloved Prophet Muhammad (SAW) because he is messenger of Allaah and for his guidance in Islam.
ரசூலுல்லாஹ் வின் சியாரத்தை தரிசிக்காதவர்கள் ஒரு தடவை போய் பார்த்து விட்டுவாங்க ............ ...இந்த வஹாபி குஞ்சுகள் எல்லாம் ஓட்டு மொத்தமாக..மஸ்ஜிதுன் நபாவியை காலியாக்க போறானுவோ............எட்கானவே ரசூலுள்ளாவின் வீடு அபூபுக்கேர் உமர் (ரலி)பள்ளிவாசல் எல்லாம் காலியாகிவிட்டன ..ஹதீஜாவின் வீடும் சியாரமும் தரை மட்டம் ... இப்போது புது வெறித்தனம் ஒன்று இந்த தொவ்ஹீத் வாஹ்ஹாபி குஞ்சுகளுக்கு வந்துள்ளது ...துருக்கியின் அடையாளம் எதுவுமே மக்கா மதீனாவில் இருக்கக் கூடாதாம் எட்கானவே 90% வீத அடையாளங்கள் இல்லை ...
ReplyDelete..ரசூலுள்ளாவின் பச்சை DOME மதீனாவில் உள்ளது அது இருக்கவே கூடாதாம் ..ரசூலுள்ளாவின் சியாரத்தை துருக்கி தேவைஇல்லாமல் பசுந்து பண்ணி அலங்கரித்து வைத்துள்ளார்களாம் .. அது பித் அத் ... சிர்காம் .....அதுவும் பள்ளிக்குள் சியாரம் இருப்பது அது ரசூலுள்ளாவின் சியாரமாக இருந்தாலும் அனுமதிக்க முடியாதாம் ....இப்படி எல்லாம் முஸ்லிம் உம்மத்துககளை போட்டு வதைக்கிறார்கள் ...இஸ்ரேல் யூதர்களுக்கே மக்கா மதீனா பாது காப்பை வழங்கிய பிறகு இந்த அப்துல்லாவிடம் நாம் இனி எதை எதிர்பார்க்கமுடியும் ..
Pilgrims are taken to these places for worship by Ulemas working for Travel agents and
ReplyDeleteit is a business for Travel agents.So,Pilgrims are hoodwinked to enter Jannah if they
can spend money in this manner and Saudis think the practice can be stopped by
destroying places of historical importance to the entire Muslim community and Muslims on the other hand are more inclined to follow Islam blindly rather than
intelligently through proper learning and understanding.
this is a rumour
ReplyDeleteand written by someone in independent news paper. dont start commenting pros and cons of this and waste you precious time. people can write anything just to nget the fame and we dont need to jump on this.Fools jump where the devils dare.
முஸ்லீம்களை அழிப்பதற்காக யூத, கிறிஸ்துவர்கள் கையாழ்கின்ற மதினுட்பமான தந்திரோபாயம் (master-mind) என்ன தெரியுமா ?
ReplyDeleteமுஸ்லீம்களிடையே கருத்து முறண்பாடுடைய குழுக்களை (இயக்கங்களை) தோற்றுவித்து அதன்மூலமாக முஸ்லீம்களை அழிக்கின்ற முயற்சிகளை மேற்கொள்வது.
இந்த அடிப்படையிலேயே,
ஈராக், சிரியா............போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்களின் பரிதாபகரமான இன்றைய நிலமைக்கு காரணம் அதுவேயாகும்.
எப்படியோ முஸ்லிம்கள் பல கூறுகளாக பிரிக்கப்பட வேண்டும், அவர்களிடையே மோதல்கள் வரவேண்டும் என்பதர்க்காக பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
இது யூத, கிறிஸ்துவர்களது master-stroke ஆகும்.
இதனை இலகுவில், வெளிப்படையாக இஸ்லாமிய அமைப்புக்களால் கண்டுகொள்ள முடியாது.
பாவம் அப்பாவி முஸ்லீம்கள் !!!
இதுவும் அல்லாஹுவின் சோதனையோ !!!
தயவுசெய்து மூலச் செய்தியை படியுங்கள்:
ReplyDeleteசெய்தி:http://www.independent.co.uk/news/world/middle-east/saudis-risk-new-muslim-division-with-proposal-to-move-mohameds-tomb-9705120.html
மறுப்பு: http://youtu.be/609pMKvU-5k
Andrew Johnsonனின் செய்திகள் பொய்யாகிப் போன தருணங்களும் உண்டு, சம்பந்தப்பட்டவரே பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஏன் இச் செய்தி சமுகத்தை பிழவு படுத்த உண்டாக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. சிந்தியுங்கள் .... சிந்திப்போருக்கு தெளிவான அத்தாட்சி உண்டு.
தன்னுடைய ரசூலின் அடக்கத்தலத்தை படைத்த இறைவனே பாதுகாக்க மாட்டானா என்ன? அவனின்றி அணுவும் அசையாது எனின் இதுவும் கூட அவனுடைய ஏற்பாடுதானோ என்னவோ..? நாம் ஏன் இதற்கு கவலைப்பட வேண்டும்
ReplyDelete