Header Ads



3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த சகோதரர்களை, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு


பிரேசில் நாட்டில் உள்ள பஹியா பகுதியை சேர்ந்த எலெய்ன்-ரோச்சா தம்பதிகளின் ஒட்டிப் பிறந்த "மாற்றான்"களான ஆர்தர்-ரோச்சா ஜோடியை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்தால் தற்போதுள்ள மூன்று கால்களில் இருவருக்கும் தலா ஒரு கால் இருக்கும். மூன்றாவது காலில் உள்ள தசைகளை உடலை பிரிக்கும் பணியில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருவரில் ஆர்தருக்கு இரு சிறுநீரகங்களும், ரோச்சாவுக்கு ஒரு சிறுநீரகமும் இருக்கும். இருவரில் ஒருவருக்கு மட்டும் பிறப்புறுப்பு இருக்கும்.

ஐந்து வயதான இருவருக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால் தனித்து செயல்படும் வாய்ப்பும் ஏற்படும். இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியான நாட்கள் தொடங்கிவிடும் என்று நம்புவதாக அவர்களது தாய் எலெய்ன் கூறியுள்ளார். மிகவும் ஆபத்தான இந்த அறுவை சிகிச்சைக்கு தங்களின் குழந்தைகளின் நலன் கருதி பெற்றோர்கள் இருவரும் ஒத்துக்கொண்டுள்ளனர். ஆசிரியர்களான இருவரும் தங்கள் குழந்தைகள் தனித்து செயல்படவேண்டும் என்ற உயரிய எண்ணத்திலேயே இம்முடிவை எடுத்துள்ளனர்.

அவர்களது தாயான எலெய்ன் கூறுகையில், 

"இந்த அறுவை சிகிச்சை குறித்து எனது மகன்களிடம் பேசுகையில் அவர்கள் இருவரும் தங்களை பிரிக்கவேண்டும் என்று கூறினர். ஆகையால் இது எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த முடிவு என்று தான் கூறவேண்டும்" என்றார். இருவருக்கும் நாங்கள் எந்த விதத்திலும் அழுத்தம் தரவில்லை என்று கூறிய எலெய்ன் தங்களது மகன்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ள மருத்துவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் என்று தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை செய்ய உள்ள மருத்துவரான சஜாரியாஸ் கலீல் கூறுகையில், 

இது ஒரு சிக்கலான கேஸ். இருவரிடமும் நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளளோம். இருவரை பிரிப்பதில் பெரிய ஆபத்து ஏதுமில்லை என்று தெரிவித்த அவர் இருவருக்கும் தனித்தனி பாகங்களை பிரிப்பது தான் சவாலான பணி என்று கூறியுள்ளார்.

இருவருக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.