Header Ads



சவூதியில் காணாமல்போன தமிழக பெண், இலங்கையரின் உதவியால் 16 வருடங்கனின் பின் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்.
நயிமுன் என்ற இந்த பெண் 1998 ஆம் ஆண்டு சவூதிக்கு பணிக்காக சென்றார்.

அங்கு சென்றவுடன் வீட்டாருடன் தொடர்புகளை இழந்த அவர், சவூதி எஜமானரின் வீட்டில் 16 வருடங்களாக சம்பளம் எதுவும் இன்றி பணியாற்றி வந்துள்ளார்.

2002 ஆம் ஆண்டில் இருந்து அவரின் குடும்பத்தினர் நயிமுனை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் சவூதியில் பணியாற்றும் அவரின் மகனும் சகோதரரும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நயிமுனை கண்டுபிடித்துள்ளார்கள்.

நயிமுனுடன் பணியாற்றியதாக கூறப்படும் இலங்கை பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பிய நிலையில், அவர் தமிழகத்தில் உள்ள நயிமுனின் குடும்பத்தாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நயிமுன் இருக்கும் இடம் தெரியவந்தது.

இதனையடுத்து தமிழக அதிகாரிகள் சவூதிக்குசென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் நேற்று நயிமுன் அவரது மகன் மற்றும் சகோதரருடன் இணைந்தார்.

இதன்போது அவருக்கு கடந்த 16 வருடங்களாக வழங்கப்படாமல் இருந்து 92ஆயிரம் ரியால்களை வழங்க வேலைக்கொள்வோர் உறுதியளித்துள்ளார்.

1 comment:

  1. சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக போவதும் சரி ஊரில் பிச்சை எடுப்பதும் சரி. இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.