Header Ads



'தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை''

நீதிமன்ற உத்தரவை மீறிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது பல சேனா, சிங்கள ராவய அமைப்பு மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுக்கு கொழும்பு மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தடை வித்தித்திருந்தது.

இந்த உத்தரவினை மீறிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தில் ஊர்வலம் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் அன்றைய தினம் நடத்தப்பட்டது.

இந்த செயப்பாட்டுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.