Header Ads



இலங்கையில் கால் பதிக்கும் ஷிஆக்களும், காதியானிகளும்..!

இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ள 200 பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அனுமதியுடன், இந்த அகதிகள் இலங்கையில் அடைக்கலம் பெற்றுள்ளனா். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களில் பலரை இலங்கை அரசாங்கம் திருப்பி அனுப்பியுள்ளது.

எனினும் அடைக்கலம் பெற்றுள்ள பாகிஸ்தானிய கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா மற்றும் அஹமதி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதை அனைத்து தரப்புக்களும் உறுதி செய்துள்ளன.

எனவே அவர்களை நாட்டுக்கு திருப்பிய அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்தே விசாரணையை உயர்நீதிமன்றம் 26ஆம் திகதிக்கு பரிந்துரைத்துள்ளது.

மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகளான நிமல்கா பெர்ணான்டோ, மரியாஸ் ருக்ஸான், மாரிமுத்து சத்திவேலு உட்பட்ட ஆறு பேர் ஆஜராகினர்.

No comments

Powered by Blogger.