Header Ads



தொடர்ந்தும் ரொக்கெட்டுகளை தயாரிக்கும் ஹமாஸ்


முற்றுகையில் இருக்கும் காசாவிலிருந்து தொடர்ந்து எம்-75 ரொக்கெட்டுகளை தயா ரிப்பதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு குறிப்பிட் டுள்ளது. காசாவில் ரொக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையின் காட்சிகளை ஹமாஸ் அமைப்பின் அல் அக்ஸா தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது.

"உங்களது பயணற்ற தலை மைகள் எமது ஏவுகணை ஆற் றலை அழித்து விட்டதாக கூறி வருகிறார்கள். ஆனால் எமது உற் பத்தி குழுவினர் தொடர்ந்து ஏவு கணைகளை தயாரிக்கின்றனர். அவைகளை களத்திற்கு அனுப்பி வருகின்றனர்" என்று இந்த உற் பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இருக்கும் ஹமாஸ் பொறியியலாளர்களால் தயாரிக்கப்படும் எம்-75 ரக ரொக்கெட்டுகள் சுமார் 80 கிலோமீற்றர் வரை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டவையாகும்.

No comments

Powered by Blogger.