Header Ads



கணவனின் பிணத்தை பறவைகள் சாப்பிட வேண்டும்

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது கணவரின் பிணத்தை பறவைகள் உண்பதற்காக வீட்டிலேயே 9 மாதங்களுக்கு வைத்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் லஃபெட் நகரை சேர்ந்த இலா சாலமன் (54) என்பவர் இறந்த தனது கணவன் கெரால்ட் (88) பிணத்தை வீட்டிலேயே பறவைகள் உண்பதற்காக வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிண வாடை வீசியதைத் தொடர்ந்து இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் பிணத்தை தனது வீட்டிலேயே வைத்துள்ளார் என்றும் தனது கணவர் தான் இவ்வாறு செய்ய சொன்னதாக பொலிசாரிடம் பதில் கூறியுள்ளார்.

இதனால் இந்த வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது.

No comments

Powered by Blogger.