Header Ads



ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதில் தோல்வி - ஒப்புக்கொள்ளும் இஸ்ரேல்

(Thoo)

ஹமாஸ் தலைவர்களை கொலை செய்யும் முயற்சியில் தோல்வியை தழுவியதாக இஸ்ரேல் ராணுவ தளபதி பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேல் ராணுவத்தின் தோல்வி என்றும் காண்ட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

காஸாவுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது காண்ட்ஸ் மேலும் கூறியது:

ஹமாஸ் தலைவர்களை எந்த நேரத்திலும், எங்கு வைத்தும் கொல்லும் திறன் இஸ்ரேல் ராணுவத்திற்கு உண்டு. ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதே இப்போதும் இஸ்ரேலின் லட்சியமாகும். அதற்கான வாய்ப்பு கிடைத்தால் நிறைவேற்றுவோம். நீண்டதொரு போரின் முடிவில் நாங்கள் உள்ளோம். வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு திரும்பி சகஜமான வாழ்வை மேற்கொள்ள சாதாரண மக்கள் (இஸ்ரேலியர்கள்) அச்சப்படுவது குறித்தும் காண்ட்ஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

அவர்களின் பாதுகாப்புக்காக எல்லையில் ராணுவத்தை நிறுத்துவோம். எதிர்கால சவால்களைக் குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு காண்ட்ஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.