பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
(ஏ.எல்.ஜனூவர்)
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப –வலயக் கல்வி அலுவலகம் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்;;.எம்.அதாஉல்லாவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேச மாணவர்களின் சிறந்த கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் நிருவாக ரீதியான இலகுவான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் ஆகியோர்களின் முயற்சியின் பலனாகவே இந்த உப – வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரும், பொத்துவில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம்.அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றான இந்த உப – வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும்,உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் கலாசார அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.
உப கல்வி வலயம் திறந்து வைத்ததன் பின்னர் பொத்துவில் அல்- பஹ்ரியா வித்தியாலயத்தின் தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையிலான புதிய வகுப்புக்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வின் இன்னொரு விசேட அம்சமாகும். இதனைத் தொடர்ந்து அல்- பஹ்ரியா வித்தியாலயத்தில் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.

அதாவுல்லாஹ் காக்கா!
ReplyDeleteநாங்கள் பார்க்க வந்தால் தொலையும் நீங்கள், மாலைகள் என்றதும் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் புற்றுப்பாம்பென்பது தெரியும் இருந்தும் ஒரு ஆசை கேட்கிறேன்! அது என்னது உங்களை அந்த ஆறேழு பேர்தான் பாக்கலாம் பேசலாம்?
இவர்கள் கட்சிக்காகாக என்னதான் செய்தார்கள்? என்று அறிய நாங்கள் கொஞ்சப்பேர் – வீடி ஒரு கட்டும் சூரியா நெருப்பொட்டி ஒண்டும் எடுத்ததுக்கு கடற்கரைக்குப் போனம்.
ஒவ்வொருவரும் வீடி பத்தப்பத்த பொக வரல்ல – அந்த ஆறுபேரால ஒங்களுக்கு எவ்வளவு தொக வருகிறது ஏண்ட கணக்கு வந்திச்சி. அப்ப நீங்க அவுகள சந்திக்கத்தான் வேணும்!
காக்கோ, என்ன நம்முட சினிமா நடிகர் போஸ் குடுத்து போஸ்டர் ஒண்டும் போடல்ல? சத்தியமா அந்த போஸ்டர்கள பாக்கக்க சிரிப்புத்தான் வருகிது. அதைவிடச் சிரிப்பு ஒன்கோளோட இருக்கிற ஆக்களும் அப்படியே சிரிச்சிப்பொட்டு ஒன்கொளோட வந்து சூப்பரா இரிக்கெண்டு சொல்றத பாக்கக்க எங்களுக்கு அதவிடச்சிரிப்பு!
எப்ப திருந்தி என்ன செயப்போறேளோ தெரியா