கோத்தாவுடன் ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸவுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகம் நிகழ்காலத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் போத்தபய ராஜபக்ஸ இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளதுடன், பௌத்த அமைப்பு பிரதிநிதிகளையும் தான் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை சந்திப்பில் கலந்துகொண்டுள்ள முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் ஆதாரமற்ற குறுந்தகவல்ளை அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில் கோத்தபய ராஜபக்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அத்துடன் இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் தாயார் தமது மகன் எத்தகைய குற்றங்களையும் செய்யவில்லையென மனவேதனையுடன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்தே குறித்த முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும் பச்சைகொடி காண்பித்ததாக அறியவருகிறது.
.jpg)
Muslimkalukku maddumthan saddam payanpaduthappadum periya kalavaratheya undupannine BBS suthanthiramaha thirihintarhal avarhalai arrest panna vakkuillai kathapaya enna neethi seivar
ReplyDeleteI would be so glamorous, if something good comes out of it.
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைக்கும் மூல காரணமே இவர்தான். கள்வனிடமே திறப்பை கொடுக்கும் முயற்சியா இது..???
ReplyDeleteஉரிமை என்பது பிறர் கொடுத்து எடுத்துக் கொள்வது அல்ல. நாமே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மயிலே மயிலே இறகு போடு என்றால் அது போடாது நாம் தான் அதனிடம் இருந்து பிடிங்கிக் கொள்ள வேண்டும்.
எமக்கு என்றால் இந்த துவேசியிடம் நம்பிக்கை இல்லை. இவர் இந்த கலந்துரையாடலுக்கு சம்மதித்ததே, அவருக்கு கொஞ்சம் காலம் தேவை.... தற்போது ராஜபக்ச அன் கோ கொஞ்சம் நெருக்கடியில் உள்ளார்கள் அவ்வளவு தான். இதற்கு துணைபோகாமல் இருந்தால் சரிதான்.
இந்த சந்திப்பில் பங்கெடுத்தவர்கள் சமூகப் பற்றும் நன் மதிப்பு முள்ளவர்கள் என்பதால் சற்று பொறுத்திருந்து பார்போம்.