Header Ads



டௌசன் வீதி கட்டிடமொன்றில் திங்கட்கிழமை இரவு திடீர் தீ விபத்து

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

கொம்பனி வீதியின் டௌசன் வீதியிலுள்ள கட்டிடமொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டது. டௌசன் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 2 ஆவது மாடியிலேயே இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. திங்கட்கிழமை 8 மணியளவில் ஏற்பட்ட இத் தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு தீயிணைப்புப் படை சென்று தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. 

அத்துடன்  2 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ முதலாம் மாடிக்கும் பரவியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இத்தீவிபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்த பொதுமக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் அப்பகுதியிலிருந்து வாகனங்களை அகற்றும் பணிகளில் பொதுமக்களும் இணைந்து உதவியதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.