Header Ads



இலங்கை முஸ்லிம் அமைப்புக்களிடம் பொதுபல சேனா எழுப்பியுள்ள கேள்வி..!

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே,

இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய பயங்கரவாத குற்றங்கள் குறித்து மௌனமாக இருக்கும் இந்த அமைப்புகளை பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகள் என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா அமைப்புகள் தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்.

தற்போதைய அரச நிர்வாகத்தில் உள்ள சில மேல் மட்டத்தினருக்கு முதுகெலும்பில்லை.

இதன் விளைவாக முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் தனது தலையை உயர்த்தியுள்ளது எனவும் டிலாந்த வித்தானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா ஆகிய அமைப்புகள் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயர் மட்ட அமைப்புகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கண்ட நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. பாலஸ்தீன் நாட்டிற்கெதிராக இஸ்ரேல் மேற்கொண்ட போரை அமெரிக்கா தவிர்ந்த அனைத்து நாடுகளும் எதிர்தன. இது உலகறிந்த உண்மை. ஏன் நமது நாட்டு ஆளும் கட்சியினூடாக பலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் டொலர் ஒதுகுவதாக செய்தி வெளியானது அது ஜனாதி விருப்பமில்லாமல் நடந்திருக்குமா?

    பொதுபலசேனவும் ஜாதிக ஹெல உறுமயவும் வேறு நோக்கங்களுடனும் இலங்கை முஸ்லிம்களை வேண்டுமென்று வம்புக்கு இழுப்பதற்குமே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆக இவர்களுக்கு வேறு நாடொன்றில் நடக்கும் பிரச்சினைக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் முடிச்சு போடுவது இவர்களது பைத்தியக்காரத்தனம் அத்துடன் முஸ்லிம்கள்மீது இவர்கள் கொண்டுள்ள பொறாமையினால் முஸ்லிம்களை எந்த வகையிலாவது பலிக்கடாவாக்க வேண்டுமென்று துடிக்கும் இவர்களுக்கு பெளத்தர்களை வைத்து பாடம் புகட்டுவதுதான் சிறந்த வழி.

    ReplyDelete

Powered by Blogger.