கத்தார் விமானத்ததை சூழ்ந்த பிரிட்டன் போர் விமானங்கள்
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் QR23 என்ற ஏ-330 வகை ஏர்பஸ் விமானம் ஒன்று 269 பயணிகளுடனும் 13 ஊழியர்களுடனும் நேற்று தோஹாவிலிருந்து இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள மான்செஸ்டருக்குப் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானிக்கு பயணிகளில் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. உடனே அவர் இந்தத் தகவலை பிரிட்டிஷ் விமான நிலையக் காவல்துறையினருக்குத் தெரிவித்து பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி அறிந்தவுடன் இங்கிலாந்தின் கோனிங்ஸ்பை விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ராயல் விமானப் படை விமானங்கள் கத்தார் விமானத்தை நெருங்கி உடன் பறந்தன. விமானம் பாதுகாப்பாக மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் காவல்துறையினர் விமானத்தினுள் சோதனையிட்டு 47 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து நாட்டவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இவர் பயணித்த விமானமும் முழுமையாக சோதனையிடப்பட்டு சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் அங்கு இல்லை என்பதுவும் உறுதி செய்யப்பட்டது. சோதனைகள் அனைத்தும் முடிந்தபின்னர் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டது என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவித்தன.

Post a Comment