நீலம், சிவப்பு உருளைக்கிழங்குகள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சாதாரண உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக, நீலம் மற்றும் சிவப்பு கலந்த உருளைக்கிழங்கை, பெலாரஸ் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன தலைவர் இவான் கால்யத்கா கூறியதாவது,
பெலாரஸ் நாட்டு மக்களின் உணவில் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது. அந்நாட்டு, தேசிய அறிவியல் திட்டத்தின் கீழ், பாரம்பரிய நிறங்களைத் தவிர்த்து, புதிய நிறங்களில் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்யும் முயற்சியில், பெலாரசில் உள்ள அறிவியல் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நீலம் மற்றும் சிவப்பு நிற உருளைக்கிழங்குகள், பாரம்பரிய உருளைக்கிழங்குகளை விட சுவை மிகுந்ததாக உள்ளது. எனினும், அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, இந்த உருளைக்கிழங்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் ஒப்புதல் கிடைத்தபின், நீலம் மற்றும் செந்நிற உருளைக்கிழங்கு வகைகள் பயிரிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
.jpg)
Post a Comment