Header Ads



அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுங்கள் - மஹிந்தவிடம் ஞானசாரர் கோரிக்கை

(Tm)

இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். துவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது பல சேனா ஆரம்பித்துள்ளது என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

அத்துடன், அமைச்சர்களோ அல்லது எம்.பி.க்களோ இனிமேல் காவியுடை மீது கைவைக்க முற்படுவார்களாயின், அதுவே அரசாங்கத்தின் அழிவாகும். அரசாங்கத்திலிருந்து குரைக்கும் நாய்களைக் கட்டிப்போடுமாறு ஜனாதிபதியிடன் கோருகிறேன் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

பௌத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். நாம் இதுவரை பொருமை காத்தது போதும். வெளியிடங்களிலிருந்து வரும் அழுத்தங்கள், நாட்டை சூரையாடிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்த அரசாங்கத்தினாலோ அல்லது அதிகாரம் படைத்தவர்களாலேயோ பௌத்தர்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. எமது எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை. 

ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் என அனைத்து தரப்பினரும் பாரியதொரு எமாற்றத்துக்குள் சிக்கியுள்ளனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் தலையீடுகள் இன்றிய தேசிய அரசியல் கோட்பாடொன்றினூடாக நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

எமது அரசியல், தேசிய அரசியலாகும். எமக்கு சிறந்த பொருளாதாரம் போது சிறந்த அரசியல் தலைமைத்துவமும் தேவைப்படுகிறது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று எவ்வளவுதான் கத்தினாலும் பல பிரிவுகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை. 

இதனால், கொள்ளையர்களும் சூழ்ச்சிக்காரர்களும் அதிகரித்துவிட்டனர். நாடு குறித்த எந்தவொரு உணர்வும் அற்ற சமூகமொன்றே இன்று அரசியல் நடத்துகிறது என ஞானசார தேரர் மேலும் கூறினார். 

1 comment:

  1. Garu.janathipathi thuma meyata pissu wediwuna karunaakara meyawa ath adankuwata ganna garu janathipathithuma obathuma gnana sarsts sarata bayaida.oyaga aanduwata oyaga tanathurata me gnanasarathamai prasna. Muslim,tamil ,snhala janathawa siyalludanama oyata wirudda karanna vidiyata meyage weda piliwala atha amanisa karunakara neethiyanukulawa meyata piyavara ganna.than meya obathumatath awawaadha karanawa .

    ReplyDelete

Powered by Blogger.