Header Ads



அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவாவில் போட்டி..?


ஊவா மாகாண சபைத் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீல.சு.க.வின் முதலாவது செய்தியாளர் மாநாடு 07-08-2014 நடைபெற்றது. இதில்  அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பேசும் போது,

முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை கொண்டு வரும் நோக்கில் முஸ்லிம் கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஊவா மாகாணத்திற்கு அங்கத்தவராக கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

(Gtn)

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் கட்சிகள் ஊவா மாகாணசபையில் தனித்து போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட  உள்ளன.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்துவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ஊவாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டாலும் உண்மையில் ஆளும் கட்சியுடன் ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் போட்யிடுகின்றமை அம்பலமாகியுள்ளது.

கடந்த கால தேசிய மாகாண தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தியதன் பின்னர், முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.