லைபீரியாவில் 'எபோலா' ஊரடங்கு சட்டம்
'எபோலா' வைரஸ் நோய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள லைபீரியா நாட்டில், ஒரு நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, கினியா, லைபீரியா, சியாரா லியோன், நைஜீரியாவில், கடந்த மார்ச் முதல், எபோலா வைரஸ் தாக்குதல்
காணப்படுகிறது.
1,230பேருக்கு...: அதிகபட்சமாக கினியா நாட்டில், 1,230 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்த நாடுகளில், 3,000 பேருக்கு, நோய் தாக்குதல் உள்ளது.கடுமையான காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல், தசை வலி, வயிற்று வலி, பசியின்மை போன்ற பல அறிகுறிகளை கொண்டுள்ள இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை. இதனால், நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் நிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் தான், புதிய மருந்து ஒன்று, நோயாளி ஒருவருக்கு அளிக்கப்பட்டு, அவர் சற்று குணமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லைபீரியா நாட்டின், வெஸ்ட் பாயின்ட் என்ற நகரில், எபோலா நோய் பரவல் அதிகமாக இருப்பதால் ஆத்திரம் அடைந்தவர்கள், மருத்துவமனைகளை சூறையாடி, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
தப்பி ஓட்டம் : இதனால் அங்கு, தனிமையில் அடைக்கப்பட்டிருந்த நோயாளிகள், தப்பி ஓடிவிட்டனர். பொதுமக்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும், தப்பி ஓடிய நோயாளிகளை கண்டுபிடிக்கவும், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அதிபர், எல்லென் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இரவு, 9:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment