Header Ads



பௌத்த மதத்தையும், காவி உடையையும் மட்டுமே நான் கவசமாக கருதுகிறேன் - ஞானசாரர்

நாட்டில் இனவாதத்தினை தூண்டி சர்வதேச சக்திகளை நாட்டிற்குள் வரவழைக்கும் மன்னார் ஆயருக்கு பொது பலசேனாவை விமர்சிக்க தகுதி இல்லை. முஸ்லிம் கிறிஸ்தவ தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்படும் நாம் இவர்களின் பார்வையில் இனவாதிகளாகவே தெரிவோம் என தெரிவிக்கும் பொதுபலசேன பௌத்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரர் இணையத்தளத்தில் வெளியான புகைப்படத்தில் இருப்பது நானில்லை. பௌத்தம் என்னை காக்கும் போது தற்பாதுகாப்பு கலை எனக்கு அவசியமில்லை என தெரிவித்தார்.

இனவாத அமைப்பென பொதுபல சேனாவை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆயர் விமர்சித்துள்ளமை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஞானசார தேரர் ஈடுபடுவதைப்போல் புகைப்படமொன்றை பிரித்தானிய இணையத்தளம் வெளியிட்டுள்ளமை தொடர்பிலும் வினவிய போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்;

பொதுபலசேனா அமைப்பினர் இனவாதிகள் என்றால்  நாம் அடக்கு முறைகளை கையாளுகின்றோம் என்றார். மன்னார் ஆயரும் முஸ்லிம் உலமாக்கலும் செய்வதன் பெயர் என்ன? நாம் நாட்டை காப்பாற்றவும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை காப்பாற்றவும் போராடுகின்றோம். ஆனால் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் புலம்பெயர் தமிழ் இயக்கங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து நாட்டிற்கு எதிரான தேச துரோக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். தற்போதும் காணாமல் போனோர் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை தயாரித்து சர்வதேச விசாரணைக்குழுவிற்கு சாதகமான முறையில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கின்றார்.

மேற்கத்தைய கிறிஸ்தவ அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு நாட்டினை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் எம்மை விமர்சிக்க எவ்விதத்திலும் தகுதியில்லை.

மேலும் இங்கிலாந்து இணையத்தளமொன்று எனது புகைப்படம் என்ற பெயரில் ஒருவர் தற்காப்பு கலையை பயில்வதை போன்ற புகைப்படமொன்றினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பலர் என்னிடம் வினவினர். எனினும் இப்புகைப்படத்தில் இருக்கும் நபர் நான் இல்லை. நான் பௌத்த மதத்தையும் காவி உடையையும் மட்டுமே கவசமாக கருதுகிறேன். 

எனக்கு கராட்டி கலை அவசியமில்லை. என்மீது பொய்யான புகார்களை சுமத்துகின்றனர். பொய்யான புகைப்படங்களுடன் என்னை தொடர்புபடுத்தி விமர்சிக்கின்றனர். எனினும் இவற்றின் மூலம் எங்களை வீழ்த்த முடியும் என நினைப்போரை எண்ணி கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

4 comments:

  1. Thamusa buddagamada kauda kiwwa thamusa buddan kiyala buddagama aasirikarsnna minisunka kskkoosi hodhandawath ubata bahe ichchara naraka balla thamusa .

    ReplyDelete
  2. Thamusa buddagamada kauda kiwwa thamusa buddan kiyala buddagama aasirikarsnna minisunka kskkoosi hodhandawath ubata bahe ichchara naraka balla thamusa .

    ReplyDelete
  3. Waaya paru pee allina komaa mattapola irukku sakkiliyanda.

    ReplyDelete
  4. நன்றி ஜபனா முஸ்லிம் இந்த படத்தையே இவன் சம்மந்தப்பட்ட செய்திக்கு போடுங்கள், இவனென்றால் மக்கள் மத்தியில் ஒரு மோசமானவன் என்ற உண்மையான எண்ணத்தை உண்டாக்கவேண்டுமென்றால் இதுபோன்ற சின்னச்சின்ன விடயங்களில்கூட உண்டாக்கலாம், (உண்மையான ரூபம் இதைவிட கொடூரமானதல்லவா? இருப்பினும்)

    ReplyDelete

Powered by Blogger.