முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்புடன் பரீட்சை எழுதுவதற்கு எதிராக பிக்குகள் முறைப்பாடு..!
உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் சில பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதனால் ஏனைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பௌத்த பிக்குவான தேவகிரியே சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவது மெய்யான பரீட்சார்த்தியா அல்லது அவரின் சார்பில் வேறும் யாருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, முஸ்லிம் மாணவிகளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கக் கூடாது.
நான் பரீட்சைக்குத் தோற்றிய பொரளை பரீட்சை நிலையமொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றினர்.
இது குறித்து பரீட்சை நிலையப் பொறுப்பாளரிடம் முறைப்பாடு செய்தேன். தேவையென்றால் பரீட்சார்த்தியின் அடையாளத்தை நிரூபிக்க ஹிஜாப்பை கழற்றிப் பார்க்க முடியும் என பொறுப்பாளர் தெரிவித்தார்.
எனினும், பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவியருக்கு மட்டும் விசேட சலுகை வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீ நல்லா படித்தால் பரீட்சையை சரியாக எழுதி சித்தி பெறலாம். பெண்களையே பற்றி பேசிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன சொல்வது,
ReplyDeleteஅடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை காட்டவேண்டியவர்களுக்கு காட்டி உறுதிப்படுத்தினால் போதும், இவங்களுக்கு படிப்பு நல்லா வரவில்லையென்பதால் இப்படி பேசுகின்றார்கள். இல்லையென்றால் பொத்துவில் என்ற ஊரில் புலமைப்பரிசில் பரீட்சை எழுத வந்த சின்னக்குழந்தைகளை பொலிஸை வைத்து பரிசோதிப்பார்களா? வேறு எந்த நாட்டில் நடக்கும் இப்படி கொடுமையான கீழ்த்தரமான செயல்பாடுகள். இது அவர்களின் குறைபாட்டினையும் மற்றவர்களின்மேல் கொண்டுள்ள கழ்ப்புணர்வான நிலைப்பாட்டையும் மூடத்தனமானவரகள் இவரக்ள என்பதற்கு இவர்களைவிட வேறு எங்கு சென்று நாம் உதாரணங்களை காட்ட முடியும்.
Adei nee virumpina hijab pottuttu poda naaye eanda enkala wampukku ilukkirai onnam sinhala gahanu.lamaita kiyanna hijab thanda kiyala api mokuth kiyanna neha.
ReplyDelete