காஸாவை சுற்றிவளைத்து நிற்கும் 86.000 சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள்..!
பாலஸ்தீனத்தின் காசா போராளிகளின் பதுங்குமிடங்களை குறிவைத்தும், அவர்களின் சுரங்கப் பாதைகளை தகர்க்கும் வகையிலும், 24வது நாளாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில், நேற்று கூடுதலாக, 16 ஆயிரம் வீரர்கள் சேர்க்கப்பட்டதை அடுத்து, சண்டையில், 86 ஆயிரம் இஸ்ரேலியர் ஈடுபட்டுள்ளனர்.
கட்டடம் ஒன்றில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து, இஸ்ரேல் ராணுவத்தினர் உள்ளே நுழைந்ததும் வெடித்துச் சிதறும் வகையில் செய்யப்பட்டிருந்த கண்ணி ஏற்பாட்டில் சிக்கிய, மூன்று இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே, 15 மீட்டர் உயரம், 1 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது; முள்வேலிகளும் உள்ளன. அதையும் மீறி, இஸ்ரேல் பகுதிக்குள் நுழைய, பல கி.மீ.,க்கு சுரங்கங்கள் தோண்டியிருந்ததை அறிந்த இஸ்ரேல் ராணுவம், இப்போது அந்த சுரங்கங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, 70 ஆயிரம் வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், மேலும், 16 ஆயிரம் வீரர்களை சண்டையில் ஈடுபடுத்தியுள்ளது இஸ்ரேல். தரை வழியாகவும், விமானம் மூலமும் பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Post a Comment